5, 6 பேர் என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார்கள் - வரலட்சுமி பகிர்ந்த பகீர் தகவல்

Published : Mar 23, 2025, 12:06 PM IST

நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி, தன்னை 5, 6 பேர் பாலியல் ரீதியாக சீண்டினார்கள் என நிகழ்ச்சி ஒன்றில் கண்ணீர்மல்க கூறி இருக்கிறார்.

PREV
14
5, 6 பேர் என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார்கள் - வரலட்சுமி பகிர்ந்த பகீர் தகவல்

Varalaxmi Sarathkumar Share Me Too Incident : மீ டூ விவகாரம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பூதாகரமாக வெடித்தது. அதன்பின்னர் நடிகைகள் பலரும் தாங்கள் எதிர்கொண்ட பாலியல் சீண்டல்கள் பற்றி வெளிப்படையாக பேசி வருகின்றனர். அந்த வகையில் தற்போது நடிகை வரலட்சுமி தனக்கு நேர்ந்த பாலியல் சீண்டல்கள் பற்றி நிகழ்ச்சி ஒன்றில் கண்ணீர்மல்க பேசி இருக்கிறார். சரத்குமாரின் மகளான வரலட்சுமியே தான் சிறுவயதில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக கூறியது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

24
varalaxmi Sarathkumar

வரலட்சுமி  ஒருபக்கம் வெள்ளித்திரையில் பிஸியாக நடித்து வந்தாலும் மறுபக்கம் சின்னத்திரையிலும் எண்ட்ரி கொடுத்து அசத்தி வருகிறார். அவர் முதன்முறையாக டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட் சீசன் 3 என்கிற நடன நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று இருக்கிறார். அந்நிகழ்ச்சி தற்போது டிஆர்பியில் சக்கைப்போடு போட்டு வருகிறது. அதில் இந்த வாரம் நடனமாடிய கெமி என்கிற பெண், கண்ணாடி முன் நின்று தன் வாழ்க்கையில் நடந்த கசப்பான அனுபவத்தை கண்ணீர்மல்க பேசினார். 

இதையும் படியுங்கள்... ரூ.2500-க்காக ரோட்டுல டான்ஸ் ஆடினேன்; ரகசியத்தை உடைத்த வரலட்சுமி சரத்குமார்!!

34
Varalaxmi sarathkumar Me Too Allegation

நம் வாழ்க்கையில் டர்னிங் பாயிண்ட் வரும்போது குடும்பமே ஆதரவாக இருக்கும் என சொல்வார்கள். ஆனால் என் வாழ்க்கையில் குடும்பம், உறவினர்கள் என யாரும் எனக்கு உதவியாக நிற்கவில்லை. மேலும் என்னை திட்டி துன்புறுத்தினார்கள், டார்ச்சர் செய்தார்கள் என்று கூறி அழுதார். அதைக் கேட்ட வரலட்சுமி... உன் கஷ்டத்தை என்னால் புரிந்து கொள்ள முடியும். ஏனெனில் என் அம்மா, அப்பா இருவருமே வேலையில் பிஸியாக இருந்ததால் சிறு வயதில் என்னை மத்தவங்க வீட்டில தான் என்னை விட்டுட்டு போவாங்க. 

44
varalaxmi Sarathkumar Says about Child Abuse

அப்படி ஒருமுறை என்னை தனியே விட்டுட்டு சென்றபோது 5, 6 பேர் என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார்கள். குழந்தையாக இருக்கும்போதே இந்த கொடுமையை எதிர்கொண்டேன். உன்னுடையதும் என்னுடையதும் ஒரே கதை தான் என்று சொன்னபடி கெமியை கட்டிப்பிடித்து அழுதார் வரலச்டுமி. தயவு செய்து பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு குட் டச், பேட் டச் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்றும் வரலட்சுமி கேட்டுக் கொண்டார். அவர் சொன்ன இந்த பகீர் தகவல் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. சரத்குமார் மகளுக்கே இப்படி ஒரு நிலைமை வந்ததா? என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இதையும் படியுங்கள்... 30 கிலோ எடையை குறைத்த வரலட்சுமி சரத்குமார்! எப்படி தெரியுமா?

Read more Photos on
click me!

Recommended Stories