ஜம்மு வைஷ்ணவ தேவி கோயிலுக்கு பக்தர்கள் எளிதாக செல்வதற்காக ஏர் இந்தியா விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.
Flight from Ghaziabad to Jammu Vaishno Devi Temple: இந்தியாவின் மிக அழகிய மாநிலமான ஜம்மு காஷ்மீரில் மிகவும் பிரசித்தி பெற்ற மாதா வைஷ்ணவ தேவி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை புரிகின்றனர். இந்நிலையில், வைஷ்ணவ தேவி கோயில் பக்தர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும்விதமாக உத்தரபிரதேசத்தின் காஜியாபாத்திலிருந்து ஜம்முவுக்கு நேரடி விமான போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.
ஜம்முவுக்கு நேரடி விமான சேவை
தலைநகர் டெல்லியின் புறநகர் பகுதியில் உள்ள காஜியாபாத்தில் இருந்து ஜம்முக்கு நேரடி விமானம் இல்லாமல் இருந்து வந்தது. இதனால் டெல்லிக்கு சென்று விமானம் ஏற் வேண்டிய நிலை இருந்தது. இந்நிலையில், காஜியாபாத்தின் ஹிண்டன் விமான நிலையத்திலிருந்து ஜம்முவுக்கு விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. ஆகையால் பயணிகள் இனிமேல் ஜம்முவுக்குச் செல்ல டெல்லி விமான நிலையத்திற்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் முதல் விமான சேவை இன்று (மார்ச் 23) காலை 9.30 மணிக்கு ஹிண்டனில் இருந்து ஜம்முவுக்குத் தொடங்கியுள்ளது. மறுமார்ர்க்கமாக ஜம்முவிலிருந்து ஹிண்டனுக்கு விமானம் மதியம் 1 மணிக்குத் புறப்பட்டு பிற்பகல் 2:30 மணிக்கு ஹிண்டனை அடையும். இதன் பின்னர் மார்ச் 30 ஆம் தேதி காஜியாபாத்தின் ஹிண்டன் விமான நிலையத்திலிருந்து புவனேஸ்வருக்கான விமான சேவை தொடங்கப்படும். இதற்கான முன்பதிவும் தொடங்கியுள்ளது.
120 அடி உயர தேர் கவிழ்ந்து ஒருவர் பலி; மதுரம்மா கோவில் திருவிழாவில் சோகம்!
ரயில் டிக்கெட் கிடைப்பது குதிரை கொம்பு
இதேபோல் காஜியாபாத்தின் ஹிண்டன் விமான நிலையத்திலிருந்து சென்னைக்கும் நேரடி விமான சேவை நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. முதல் நாளில் 177 பயணிகள் சென்னையிலிருந்து ஹிண்டன் விமான நிலையத்தை வந்தடைந்தனர். ஜம்மு வைஷ்ணவ தேவி கோயிலுக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஜம்மு காஷ்மீருக்கு செல்லும் ரயில்களில் டிக்கெட் கிடைப்பது குதிரை கொம்பாக உள்ளது.
தட்கல் டிக்கெட்டுகள் பெற அவதி
குறிப்பாக கோடை காலத்தில் நவராத்திரியின் போது வைஷ்ணவ தேவி கோயிலுக்குச் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், ரயில்களில் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகள் கிடைக்கவில்லை. காத்திருப்போர் பட்டியல் 200 ஐத் தாண்டியுள்ளது. காசியாபாத் சந்திப்பில் உள்ள டிக்கெட் கவுண்ட்டரில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. தட்கல் டிக்கெட்டுகளைப் பெற இரவில் மக்கள் வரிசையில் நிற்கத் தொடங்குகிறார்கள்.
பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
டிக்கெட் கவுண்ட்டரில் ஆர்பிஎஃப் மற்றும் ஜிஆர்பி பாதுகாப்பை அதிகரித்துள்ளன. அதே நேரத்தில், டிக்கெட்டுகளை உறுதிப்படுத்தும் தரகர்கள் மீது கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மே 25 வரை பல ரயில்களில் முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகள் கிடைக்கவில்லை. ஜம்மு மற்றும் கத்ரா செல்லும் ரயில்களில் காத்திருப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
திருப்பதி கோவிலில் இனி இந்துக்களுக்கு மட்டுமே வேலை! முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிரடி!