
இந்திய சுற்றுலா அமைச்சமும், தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை மற்றும் தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில் நாஞ்சிக்கோட்டை கிராமத்தில் இன்று பொங்கல் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது .மாட்டு வண்டியில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஊர்வலமாக நாஞ்சிக்கோட்டை கிராமத்தை சுற்றி பார்த்தபின், சர்க்கரை பொங்கல் வைத்து பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. தொடர்ந்து கிராமிய விளையாட்டுகளும், கரகாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட கிராமிய கலை நிகழ்ச்சிகளும் உற்சாகமாக நடைபெற்றது.