தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்று முடிந்த நிலையில் தமிழக வெற்றி கழக கொள்கை பரப்பு பொதுச்செயலாளர், தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தலைவர் அருண்ராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். முதல் கட்டமாக தமிழக வெற்றி கழகத்துக்கு வந்த கோரிக்கைகள் மனுக்கள் குறித்து ஆலோசித்தோம் தமிழகத்தை மண்டல வாரியாக பிரித்து அங்குள்ள பல்வேறு சங்கங்களாக சந்தித்து அறிக்கை தயார் செய்வோம்.