தனியார் தொலைகாட்சி விழாவில் கலந்து கொண்ட அண்ணாமலை இத்தனை நாட்கள் எனக்கென்று ஒரு பொறுப்பு கட்டுப்பாடு இருந்தது. அண்ணாமலையாக நான் அரசியல் பேச முடியும். செய்ய முடியும். அடித்து ஆட கூடிய பாக்சிங் கலை அரசியல்வாதிக்கு தேவைப்படுகிறது. அதனால் இன்னும் கொஞ்சம் பேச்சு ஸ்டைலை மாற்ற வேண்டும். பக்குவமாக பேசுவதற்கு நயினார் நாகேந்திரன் இருக்கிறார். கூட்டணி குறித்து நயினார் நாகேந்திரனிடம் பேசி கொள்ளுங்கள். இனி நம்ம பாலை மட்டும் நாம அடித்தால் போதும். இனி பவுன்சர்ஸ், டப் பால்ஸ் எல்லாம் நயினார் நாகேந்திரன் பார்த்து கொள்வார். இனி நாம சிக்ஸ் அடிப்பது தான் நமது வேலை. கஷ்டமான பால் எல்லாம் நயினார் நாகேந்திரன் ஆடிக்குவாரு. இவ்வாறு அண்ணாமலை பேசினார்.