மதுரையில் 8 வயது சிறுமி மர்மமான முறையில் உயிரிழப்பு; தலைமறைவான தந்தையை தேடும் போலீசார்!!

மதுரையில் 8 வயது சிறுமி மர்மமான முறையில் உயிரிழப்பு; தலைமறைவான தந்தையை தேடும் போலீசார்!!

Published : Sep 24, 2022, 06:03 PM IST

மதுரையில் 8 வயது சிறுமி வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவத்தில் தலைமறைவாக இருக்கும் அவரது தந்தையை போலீசார் தேடி வருகின்றனர்.
 

மதுரை பாரதியார் ரோடு பகுதியில் உள்ள வ.உ.சி தெருவைச் சேர்ந்த காளிமுத்து - பிரியதர்ஷினி தம்பதிக்கு 8 வயதில் தர்ஷினி என்ற பெண் குழந்தை உள்ளது. காளிமுத்து குடும்பத்துடன் வ.உ.சி தெருவில் வசித்து வந்தார். இந்த நிலையில், வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசி வருவதாக அக்கம் பக்கத்தினர் மதுரை ஜெய்ஹிந்த்புரம்  போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

மேலும் படிக்க:உலக இதய தினம் - மருத்துவ கல்லூரி மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டில் வந்து பார்த்தபோது 8 வயது  சிறுமி தர்ஷினி சடலமாக கிடந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, சிறுமியின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள காளிமுத்துவை போலீசார் தேடி வருகின்றனர். தொடர்ந்து எட்டு வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

07:34மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த எல்.முருகனுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
08:10முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளைத் தொடங்கி வைத்த அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் !
05:22தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறி: மதுரையில் பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு பேட்டி
03:33மாவட்ட விளையாட்டு அரங்கில் நவீன உடற்பயிற்சி கூடம் திறப்பு : விளையாட்டு வீரர்களுடன் ஆதவ் அர்ஜுனா !
08:35ஒரே தேசம் ஒரே ஆட்சி மாநில அரசுகளே கூடாது என்பதுதான் அவர்களின் திட்டம் ! திருமாவளவன் அதிரடி
03:16தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யை பார்க்கணும் ! - கேரளாவில் நவராத்திரி விழாவுக்கு வரும் மக்கள் கருத்து !
06:10மாற்றுத்திறனாளிகள் தின விழா : காட்பாடியில் நலத்திட்ட உதவிகள் மற்றும் பரிசுகளை வழங்கிய விஜய் பாலாஜி!
08:19அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு குறித்து சென்னையில் அமைச்சர் வெங்கடரமணன் விளக்கம் !
04:02மாகரல், ஆர்பாக்கம் கிராமங்களில் தொடர் மழை: காஞ்சிபுரத்தில் குளிர்ந்த வானிலை !
03:39திருவண்ணாமலையில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு: ஒரே நாளில் 1.5 லட்சம் பனை விதைகள் நடும் இயக்கம் !