பொன்முடி மீதான தண்டனை நிறுத்தி வைப்பு; திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

பொன்முடி மீதான தண்டனை நிறுத்தி வைப்பு; திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

Published : Mar 11, 2024, 05:39 PM IST

திருவெண்ணைநல்லூரில் திமுக கழக துணை பொதுச் செயலாளர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி பொன்முடி வழக்கினை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்ததன் எதிரொலியாக திமுகவினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

திமுக கழக துணை பொதுச் செயலாளரும், முன்னாள் உயர்கல்வித் துறை அமைச்சருமான பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி பொன்முடி மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவியை குற்றவாளிகள் என அறிவித்து தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து பொன்முடி தனது அமைச்சர் பதவி, சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார்.

உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பொன்முடி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இரு தரப்பு வாதங்களை பெற்ற உச்சநீதிமன்றம் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி பொன்முடி மீதான தண்டனையை நிறுத்தி வைப்பதாக உத்தரவிட்டது.

உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்கும் விதமாக திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவெண்ணைநல்லூர் மார்க்கெட் பகுதியில் திமுகவினர் பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

01:00Illicit Liquor: பால் பாக்கெட்டை போல் வீடு வீடாக டோர் டெலிவரி செய்யப்படும் சாராய பாக்கெட்
02:31 90 அடி உயரம் கொண்ட விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலைக்கு 5000 லிட்டர் பால் அபிஷேகம்.. ஏராளமான பக்தர்கள் தரிசனம்!
02:23புகழேந்தி எம்.எல்.ஏ. உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!
23:31ஆளுநருக்கு சட்டம் தெரியாதா? நீதிமன்றம் தான் சரி.. ஆளுநரை வெளுத்து வாங்கிய அமைச்சர் பொன்முடி..
02:15Car Festival: திரும்பும் திசையெங்கும் மனித தலைகள்; மேல்மலையனூர் அங்காளம்மன் ஆலய தேர் திருவிழா கோலாகலம்
04:09பொன்முடி மீதான தண்டனை நிறுத்தி வைப்பு; திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
04:42ஸ்ரீ வராகி அம்மன் ஆலய மயான கொள்ளை விழா; ஆயிரக்கணகான பக்தர்கள் பங்கேற்று சிறப்பு வழிபாடு
02:54விளவங்கோடு தொகுதியை காலியானதாக அறிவித்த சபாநாயகர், பொன்முடியின் திருக்கோவிலூர் தொகுதியை அறிவிக்காதது ஏன்? பாஜக
05:59“உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்” பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்த பொன்முடி
Read more