இந்த விஷயத்தில் இந்தியாவுக்கே தமிழ்நாடும், முக ஸ்டாலினும் முன் மாதிரியாக உள்ளனர்; எம்பி கனிமொழி பெருமிதம்!!

இந்த விஷயத்தில் இந்தியாவுக்கே தமிழ்நாடும், முக ஸ்டாலினும் முன் மாதிரியாக உள்ளனர்; எம்பி கனிமொழி பெருமிதம்!!

Published : Sep 26, 2022, 10:34 AM IST

மக்கள் பிரச்சனை எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் நேரடியாக சென்று பிரச்சனைகளுக்கு  தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தீர்வு கண்டு வருகிறார் என்று கடம்பூர் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கனிமொழி எம்பி பேசினார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கடம்பூர் பேரூராட்சியில் உள்ள 9 வார்டுகளுக்கு   இடைத்தேர்தல் வரும் 29ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் கடம்பூரில் காமராஜர் சிலை அருகே தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கோவில்பட்டி நகர் மன்ற தலைவர் கா கருணாநிதி, ஒன்றிய குழு தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், ஒன்றிய செயலாளர்கள் சின்ன பாண்டியன், சுப்பிரமணியன், முருகேசன் மற்றும் மதிமுக மாவட்ட செயலாளர் ஆர் எஸ் ரமேஷ் உள்பட திரளான திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

ஒன்பது வார்டுகளில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி கூட்டத்தில் எம்பி கனிமொழி பேசுகையில், ''மக்களை தேடி மருத்துவம் என்ற ஒரு மிக உன்னதமான திட்டம் முன்னேறிய நாடுகளில் கூட மக்களை தேடி செல்வதில்லை. மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும் என்றால், குடும்பத்தின் பாதி வருமானம் அதற்கே செலவாகிவிடும். இப்படி இருக்கக்கூடிய சூழலிலே, மக்களை தேடி உங்களது ஆரோக்கியத்தின் மீது இருக்கும் அக்கறையினால், அரசாங்கம் உங்களைத் தேடி வருகிறது. இந்தப் பெருமை தமிழக அரசாங்கத்தைச் சேர்ந்தது.

20 ஆயிரம் புத்தகம் படித்த அண்ணாமலை..! பாஜகவினரையும் படிக்க வைக்க வேண்டும் - ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு

தேர்தலின் முக்கியத்துவத்தை உணர்ந்து நாம் வாக்களிக்க வேண்டும். இந்த தேர்தல் வழியாக அரசாங்கம் செய்யக்கூடிய நல்ல திட்டங்கள் உங்களை வந்து அடைய வேண்டும். இன்று இந்தியாவிற்கே வழிகாட்டியாக தமிழ்நாடு இருக்கிறது. தமிழ்நாட்டைப் பார்த்துதான், நாடு முழுவதும் மதிய உணவு திட்டத்தை அறிமுகம் செய்து வருகின்றனர். தற்போது நமது முதலமைச்சர் காலை உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

காலை உணவு திட்டம்  என்பது குழந்தைகளுக்கு வளரக்கூடிய பருவத்திலே மிக முக்கியமான ஒன்று. அந்த திட்டத்தை இன்று நம்முடைய முதலமைச்சர் நம்முடைய திராவிட முன்னேற்ற கழக அரசாங்கம் கொண்டு வந்திருக்கிறது. விரைவில் அனைத்து அரசுப் பள்ளிகளில் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்.  

சினிமா பாணியில் 40 அடி உயரமுள்ள மேம்பாலத்தில் தூக்கி வீசப்பட்ட இளைஞர்.. ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலி.!

மக்கள் பிரச்சினை எங்கெல்லாம் இருக்கிறதோ, அங்கெல்லாம் தமிழக முதல்வர் நேரடியாக சென்று பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு வருகிறார். அதற்கு முன் உதாரணமாக கோவில்பட்டி தீப்பெட்டி தொழிலாளர்கள் சந்தித்து வரும் பிரச்சினைகள் குறித்து நேரடியாக சந்தித்து அவர்களுடைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறார். நல்லாட்சியின் திட்டங்கள் உங்களை வந்து சேருவதற்கான ஒரு வழி வகையை நீங்கள் உருவாக்கி தரவேண்டும். அதற்கு நீங்கள் இந்த நல்லாட்சிக்கு வாக்களிக்க வேண்டும்'' என்றார்.

02:46Viral Video: துலாபாரம் ஊஞ்சலில் அமர்ந்ததும் குழந்தையாக மாறிய அன்புமணி
01:06Priya Anand: திருச்செந்தூர் முருகன் கோவிலில் மெய்சிலிர்த்து நின்ற பிரியா ஆனந்த்
02:12எட்டயபுரம்.. சாலையோரம் நின்ற பைக் மீது மோதிய கார்.. இருவர் உடல் நசுங்கி பலி - பதறவைக்கும் CCTV காட்சிகள்!
03:58திருச்செந்தூர் முருகன் கோவிலில் பரபரப்பு! பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த நபர்! அலறிய பக்தர்கள்! நடந்தது என்ன?
05:06TN Rain : தூத்துக்குடி.. மதுரை.. கொட்டித்தீர்த்த பேய் மழை.. வெள்ளக்காடாக மாறிய சாலைகள் - மக்கள் அவதி! Video!
00:35அக்கா எனக்கு கண் பார்வை சரி ஆயிடுச்சு.. உதவி செய்த கனிமொழி கருணாநிதிக்கு நன்றி சொன்ன மாணவி!
00:21Kanimozhi : "மோடி தமிழ் கற்க நாங்களே நல்ல ஆசிரியரை அனுப்புறோம்" - தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய கனிமொழி!
05:31என்ன விமர்சனம் வைத்தாலும் "இந்தியா கூட்டணி" வெல்லும்.. 40 இடங்களும் எங்களுக்கே - விஜய் வசந்த் நம்பிக்கை!
01:33தூத்துக்குடியில் பரபரப்பு.. தோழியை பிரிந்த சோகம் - திருமணமான 7 மாதத்தில் பெண் காவலர் எடுத்த பயங்கர முடிவு!
01:17தூத்துக்குடி.. விசைப்படகு உரிமையாளர்கள் சங்க தலைவர் கைது - துறைமுக வாயில் முன் மீனவர்கள் சாலை மறியல்!
Read more