திருவாரூரில் அரசு பேருந்துகளின் கண்ணாடிகளை உடைத்த மூவர் கைது

திருவாரூரில் அரசு பேருந்துகளின் கண்ணாடிகளை உடைத்த மூவர் கைது

Published : Sep 27, 2022, 10:11 AM IST

திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில் நின்றிருந்த 3 அரசு பேருந்துகளின் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவத்தில் 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

திருவாரூர் விளமல் பகுதியில் புதிய பேருந்து நிலையம் உள்ளது. இந்நிலையில் கடந்த 22 ஆம் தேதி இரவு 9 மணி அளவில்  இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள், பேருந்து நிலையத்தில் நின்றிருந்த மூன்று அரசு பேருந்துகளின் கண்ணாடிகளை கற்களால் உடைத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

இது தொடர்பாக தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பேருந்துகளின் கண்ணாடியை உடைத்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். 

இதில் திருவாரூர் அரசு பேருந்துகளின் கண்ணாடிகளை உடைத்த சாகுல் ஹமீது, அஹமத்துல்லா, முகமது மகசூன்மகதீர், ஹாஜா நவாஸ் ஆகிய நான்கு பேரை போலீஸார் கைது செய்து நாகப்பட்டினம் சிறையில் அடைத்தனர்.

01:58ஆபத்தான நிலையில் அரசு பேருந்துகள்: உயிரை கையில் பிடித்துக் கொண்டு பயணம் - முதல்வரின் சொந்த ஊரில் அவலம்!
02:10நெரிசலில் சிக்கி தவித்த வாகனங்கள்; கைக்குழந்தையுடன் களத்தில் இறங்கி போக்குவரத்தை சரி செய்த காவலர்
03:20முதல்வரோட சொந்த ஊர்ல ஆஸ்பத்திரி இவ்ளோ மோசமா இருக்கு - பொதுவெளியில் அதிகாரியை அலரவிட்ட வேல்முருகன்
04:09ஆழித் தேர் திருவிழாவுக்கான பந்தக்கால் முகூர்த்த நிகழ்வு விமரிசையாக நடைபெற்றது
05:48பிறவி கடன், திருமண தடை நீங்கும் தர்மபுரீஸ்வரர் ஆலய சுவாமி வீதியுலா; பக்தர்கள் பரவசத்துடன் வழிபாடு
03:36நெருப்பை தாண்டி குதித்த மாடுகள்; திருவாரூர் பொங்கல் விழாவில் சுவாரசியம்
04:41மன்னார்குடியில் கல்லூரி பொங்கல் விழாவில் மாட்டு வண்டி ஓட்டியும், கும்மி அடித்தும் மாணவிகள் அசத்தல்
04:15மாட்டு வண்டி, பறையாட்டம் என பாரம்பரிய சாயலில் கலைகட்டிய பொங்கல் விழா; திருவாரூரில் கோலாகலம்
00:56திருவாரூரில் அரசுப்பேருந்து நடத்துநர் மீது கொலைவெறி தாக்குதல்; கல்லூரி மாணவர்கள் கைது
04:242 வயதில் உயிரிழந்த மகளை அம்மன் சிலையாக வடித்து கும்பாபிஷேகம் நடத்திய தந்தை; பொதுமக்கள் நெகிழ்ச்சி