Aug 20, 2023, 12:02 PM IST
திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை அடுத்த ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட தொட்டி அப்பிச்சி கோவில் பகுதியில் 300-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே செயல்பட்டு வரும் மளிகை, சில்லி சிக்கன் கடை உட்பட ஐந்துக்கும் மேற்பட்ட கடைகள் விடிய விடிய செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதனால் ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட அறிவொளி நகர், சேடபாளையம், குருவாயூரப்பன் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் குடிபோதை ஆசாமிகள் அங்கு வந்து விடிய விடிய சைடிஷ்களை வாங்கிக்கொண்டு குடித்துவிட்டு போதை தலைக்கேறியதும் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து கதவுகளை தட்டுவதும் மது பாட்டில்களை வீதியில் போட்டு உடைப்பதும் அவ்வழியே வருபவர்களிடம் தகராறில் ஈடுபடுவதையும் வழக்கமாகக் கொண்டிருப்பதாக அப்பகுதியினர் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு வழக்கம்போல மது போதையில் அங்கு வந்த ஆசாமிகள் போதை தலைக்கேறிய நிலையில் தகராறில் ஈடுபட்டதோடு அவர்களுக்குள்ளேயே மாறி மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது .அதனை அப்பகுதியை சேர்ந்த சிலர் தங்களது செல்போன்களில் வீடியோவாக பதிவு செய்து அதனை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து வைரலாக்கி உள்ளனர்.
இச்சம்பவம் குறித்த அப்பகுதியினர் கூறுகையில் தினமும் இதே போல் குடி போதை ஆசாமிகள் ஏரியா விட்டு ஏரியா வந்து குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொள்வதும் இதற்கு காரணமாக உள்ள விடிய விடிய செயல்படும் கடைகளை போலீசார் மூட வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாக உள்ளது.
Vijay : கேரளாவில் படுதோல்வியை சந்தித்த வாரிசு.. அப்போ லியோ கதி.? தளபதி விஜய் படத்துக்கு வந்த சிக்கல்