Watch : இழப்பீடு வழங்காத பொதுப்பணித்துறை! நாய்க்கு தாலி கட்டி நூதன போராட்டம் நடத்தும் விவசாயிகள்!

Aug 19, 2023, 11:31 AM IST

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த பொன்னிவாடி கிராமத்தில் உள்ள நல்லதங்காள் ஓடை நீர்த்த அணை கட்டுமான பணிக்காக 150 விவசாயிகளிடமிருந்து 820-ஏக்கர் நிலத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கடந்த 1997-ஆம் ஆண்டு கையகப்படுத்தி 2000-ஆம் ஆண்டு அணை கட்டுமான பணிகளை தொடங்கினர்.அப்போது விவசாயிகளிடம் அணை கட்டுவதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டது.

நிலம் கொடுத்த விவசாயிகள் உரிய இழப்பீடு தொகை கேட்டு 2003-ஆம் ஆண்டு பாதிக்கப்பட்ட விவசாயிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்த விவசாயிகள்.வழக்கில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகை மற்றும் அதற்கு உண்டான வட்டியை சேர்த்து விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என கடந்த 2019-ஆம் ஆண்டு நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.

இருப்பினும் விவசாயிகளுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் உரிய இழப்பீடு தொகை வழங்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நல்லதாங்கால் அணைப்பகுதியில் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் 5-வது நாள் காத்திருப்பு போராட்டத்தில் நாய்க்கும் - விவசாயியான பாலசுப்பிரமணியனுக்கும் மங்கள வாத்தியங்கள் முழங்க திருமணம் நடைபெற்றது. இதில் மாலை அணிவித்து. மஞ்சள் கட்டி தாலி கயிற்றை_விவசாயி பாலசுப்பிரமணியம் நாய் கழுத்தில் கட்டி திருமணம் செய்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.