Jun 13, 2023, 6:59 AM IST
திருப்பூர் பழைய பேருந்து நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம் புணரமைக்கப்பட்டு கலைஞர் மத்திய பேருந்து நிலையம் என புதிதாக திறக்கப்பட்டுள்ளது. புதிதாக திறக்கப்பட்டு 5 மாதங்கள் மட்டுமே ஆகும் நிலையில் இந்த பேருந்து நிலையத்தில் ஏராளமான வழிப்பறி மற்றும் சமூக விரோத செயல்கள் அதிக அளவில் காணப்படுகிறது.
மேலும் வழிப்பறி மற்றும் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மது போதையில் பேருந்து நிலைய மையப்பகுதிகளில் அலங்கோலமாய் மயங்கி விழுந்து கிடக்கின்றனர். பெண்கள், குழந்தைகள் அதிக அளவில் பயன்படுத்தும் பேருந்து நிலையத்தில் ஆடைகள் கலைந்து போதையில் மயங்கி கிடக்கும் நபர்களால் பெண்கள் மற்றும் குழந்தைகள் நடமாட முடியாமல் முகம் சுழிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. காவல் துறையினர் பேருந்து நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு குற்ற செயல்களை தடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.