Nov 24, 2023, 11:28 AM IST
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பொங்கலூர் பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் முருகேசன் மகனின் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. மணமக்கள் நேற்று இரவு முதலே நிச்சயம் போன்ற சீர் சடங்குகளில் கலந்து கொண்டு விடிய விடிய தூங்காமல் காலை சுப முகூர்த்தம், பிற்பகலில் வரவேற்பு முடிந்தும் மண்டபத்தை விட்டு எங்கும் செல்லாமல் மண்டபத்திலேயே காத்துக் கொண்டிருந்தனர்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வருவதாக 2 மணி வரை சந்தேகமாகவே அனைவருக்கும் தகவல்கள் கிடைத்தது. இருப்பினும் மனம் தளராமல் அவர் உறுதியாக வருவார் என அனைவருக்கும் தெரிவித்து காத்துக்கொண்டிருந்தனர். மாலை 4 மணிக்கு அண்ணாமலை வருகை தந்தார். அப்போது மண்டபத்தில் காத்துக் கொண்டிருந்த மணமக்கள் மேடை ஏறி அவரிடம் ஆசீர்வாதம் பெற்று அறிவுரைகளை கேட்டுக்கொண்டனர். தொடர்ந்து அங்கிருந்தவர்கள் பாஜக தலைவர் அண்ணாமலையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு அனுப்பி வைத்தனர்.