Watch : திருப்பூர் அருகே தீ பற்றி எரிந்த காலி கேஸ் டேங்கர் லாரி! பெரும் விபத்து தவிர்ப்பு!

Watch : திருப்பூர் அருகே தீ பற்றி எரிந்த காலி கேஸ் டேங்கர் லாரி! பெரும் விபத்து தவிர்ப்பு!

Published : Apr 08, 2023, 09:03 AM IST

திருப்பூர் அருகே காலி கேஸ் டேங்கர் லாரியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அதிர்ஸ்ட வசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. தீவிபத்தால் லாரியின் முன்பகுதி முற்றிலும் எரிந்து நாசமானது.
 

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே காட்டம்பட்டியில் உள்ள இன்டேன் கேஸ் சேமிப்பு கிடங்கில் கேஸ் இறக்கிவிட்டு சென்னை நோக்கி காலி டேங்கர் லாரி சென்றுகொண்டிருந்தது. ஈரோடு பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த ரவி என்பவர் லாரியை ஓட்டிச் சென்றார். திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து பழங்கரை பைபாஸ் சாலையில் லாரிகள் நிறுத்தியபோது டிரைவர் இருக்கையின் இடது புறம் தீ பிடித்திருப்பதை கண்ட டிரைவர் ரவி தண்ணீர் ஊற்றி அணைக்க முற்பட்ட போது, தீ மளமளவென பரவியது. இதையடுத்து டிரைவர் எட்டிக் குதித்து தப்பியோடினார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அவிநாசி மற்று திருப்பூர் வடக்கு தீயணைப்பு துறையின் இரண்டு வாகனங்களில் வந்து 20 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் லாரியின் முன் பகுதி முழுவதும் எரிந்து சேதமானது. தீ விபத்து குறித்து அவிநாசி போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

00:30திருப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் ரொமான்ஸ்; ரூ.13000 அபராதம் விதித்த போலீஸ்
00:41Accident Video: தவறான திசையில் எண்ட்ரி கொடுத்த கார்; சாலையில் தலைகீழாக கவிழ்ந்த அதிர்ச்சி வீடியோ
02:59கள்ளக்குறிச்சி சம்பவம்: நாம்தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.. நடிகர் விதார்த் பேட்டி!
02:08திருப்பூர்.. போதையால் சீரழியும் சிறுவர்கள்.. பொதுவெளியில் போதைப்பொருள் உட்கொள்ளும் அவலம் - Viral Video!
00:45திருப்பூரில் அதிகரிக்கும் விபச்சாரம்.. ரெய்டு விட்ட போலீஸ்.. கையும் களவுமாக சிக்கிய அழகிகள்..
02:14கொடியை கழட்ட சொன்ன பாஜகவினர்.. ஆபாசமாக திட்டிய அதிமுகவினர்.. கடும் மோதல்.. பல்லடத்தில் பரபரப்பு
29:57பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் திருப்பூர் மணிப்பூராகிவிடும்.. எச்சரித்த முதல்வர் முக ஸ்டாலின்..
03:58அவிநாசி லிங்கேஸ்வரர் ஆலய மகா தெப்போற்சவம் விழா; ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சிறப்பு தரிசனம்
00:46முறையான ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற ரூ.3,33,500/- பணம் பறிமுதல்!
02:31திருப்பூரில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற வள்ளி கும்மியாட்டம்; மெய்சிலிர்த்து பார்த்த நடிகர் ரஞ்சித்
Read more