Jan 19, 2023, 1:28 PM IST
தஞ்சாவூர் அருகே திருக்கானூர்பட்டியில் புனித அந்தோணியார் பேராலய பொங்கல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார். ஏராளமான மாடுபிடி வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த போட்டியில் தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், கரூர், தேனி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 550 காளைகளும், தஞ்சை, புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 401 மாடுபுடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.
12 சுற்றுகலாக போட்டி நடைபெறுகிறது. மாடுபிடி வீரர்கள் கொரோனா பரிசோதனை சான்றிதழ் உள்ள வீரர்களுக்கு மட்டுமே களத்தில் அனுமதி என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மாவட்டத்தின் மிகப்பெரிய ஜல்லிக்கட்டு போட்டி திருக்கானூர்பட்டி ஜல்லிக்கட்டு என்பது குறிப்பிடத்தக்கது. தஞ்சை மாவட்டத்தில் நாஞ்சிக்கோட்டை, ரெட்டிபாளையம், ராமநாதபுரம், மானோஜிப்பட்டி, திருமண சமுத்திரம் உள்ளிட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும்.