புத்தக வெளியீட்டு விழாவில் நடிகர் சிவக்குமார் திடீரென பழ.கருப்பையாவின் காலில் விழுந்ததும், ரசிகர் ஒருவர் கொண்டு வந்த பொன்னாடையை தூக்கி வீசியதும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கண்ணதாசன் மணி மண்டபத்தில் பழ கருப்பையா எழுதிய “இப்படித்தான் உருவானேன்” நூல் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் நடிகர் சிவகுமார் மற்றும் பழ.நெடுமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் நடிகர் சிவகுமார் மேடையில் பேசும்போது குடிநீருக்காக போராடியது, உண்ணாவிரதம் இருந்தது குறித்து பேசி திடீரென பழ.கருப்பையாவின் காலில் விழுந்து வணங்கி மீண்டும் பேச ஆரம்பித்தார். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து நிகழ்ச்சி முடிவில் வயதான ரசிகர் ஒருவர் சிவக்குமாருக்கு தான் கொண்டு வந்த பொன்னாடையை சிவக்குமாருக்கு அணிவித்து வாழ்த்து தெரிவிக்க முயன்றார். 

அப்பொழுது அதை தடுத்து பொன்னாடை வாங்கி தூக்கி வீசி விட்டு சென்றார். இதனால் அந்த ரசிகர் மனவேதனை அடைந்தார். பொது இடங்களில் நடிகர் சிவக்குமார் கோபமாக நடந்து கொள்வது தொடர்ந்து நடைபெற்று வருவது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

01:06முந்தாநாள் பெய்த மழையில் நேற்று முளைத்த காளான் அண்னாமலை: அதிமுக நிர்வாகி ஆவேசம்!
02:38சிவகங்கை: குஷ்புவின் உருவ பொம்மையை தீயிட்டு கொளுத்த முயன்ற திமுகவினர்.. அலேக்காக தூக்கிய போலீஸ்
2116:40மேடையிலேயே பழ.கருப்பையாவின் காலில் விழுந்த சிவக்குமார்; ரசிகரின் பொன்னாடையை தூக்கி வீசி அடாவடி
02:22தாயின் கல்லறையை மணமேடையாக்கிய இளைஞன்; மகனின் செயலால் குடும்பத்தினர் நெகிழ்ச்சி
04:45எங்கள் கட்சியில் சண்டையும் இல்லை, சச்சரவும் இல்லை - கார்த்திக் சிதம்பரம்
1866:40அடிக்குற வெயிலுக்கு எவ்வளவு தண்ணி குடிச்சாலும் தாகம் அடங்கலயே; குழாயை திறந்து தாமாக தண்ணீர் அருந்தும் காளை
03:03விறுவிறுப்பாக நடைபெற்ற சிறவாவயல் மஞ்சுவிரட்டில் நிகழ்ந்த சோகம்; சிறுவன் உள்பட இருவர் பலி
03:34டாப் 10 காளைகளுடன் மாட்டு பொங்கல் கொண்டாடிய இலங்கை ஆளுநர் செந்தில் தொண்டமான்
02:18சிவகங்கை ஏழைக்காத்தாள் அம்மன் கோவில் திருவிழா; உடல் முழுவதும் சேறு பூசி பக்தர்கள் வினோத நேர்த்திக்கடன்