Watch : ராப்பூசல் கோவிலில் பங்குனித் திருவிழா! ஜல்லிக்கட்டு விழாவுடன் கோலாகலம்!

Watch : ராப்பூசல் கோவிலில் பங்குனித் திருவிழா! ஜல்லிக்கட்டு விழாவுடன் கோலாகலம்!

Published : Apr 12, 2023, 11:31 AM IST

ராப்பூசல் முனியாண்டவர் கோவில் பங்குனித் திருவிழாவை முன்னிட்டு, ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி விமர்சையாக நடைபெற்று வருகிறது.
 

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகேயுள்ள ராப்பூசல் முணியாண்டவர் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு வருடம் தோறும் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டி இந்த ஆண்டும், காலை மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது

800 காளைகள் களம் காண உள்ள இப்போட்டியில் 300 மாடுபிடி வீரர்கள் எட்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு காளைகளை அடக்கி வருகின்றனர்.

போட்டியை விராலிமலை தொகுதி எம்எல்ஏவும் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான விஜயபாஸ்கர் கொடி அசைத்து துவக்கி வைத்தார்

இதில் கோயில் காளைகள் முதலில் அவிழ்த்து விடப்பட்ட நிலையில் தொடர்ந்து திருச்சி, திண்டுக்கல், கரூர், தேனி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகள் கால்நடை துறையின் பல்வேறு கட்ட மருத்துவ பரிசோதனைகளுக்கு பிறகு வாடிவாசலில் அவிழ்த்து விடப்படுகிறது.

போட்டியில் சிறந்த காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு பணம் முடிப்பு, பீரோ, பிரிட்ஜ், டிரஸ்சிங் டேபில், சில்வர் பாத்திரம், பிளாஸ்டிக் சேர் உள்ளிட்டவைகள் வழங்கப்படுகிறது. போட்டியை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த ஆயிரக்கணக்காணவர்கள் திரண்டு நின்று கண்டு களித்து வருகின்றனர். மாவட்ட மருத்துவ துறை சார்பில் ஜல்லிக்கட்டு திடல் அருகே தற்காலிக மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு காயம் அடைபவர்களுக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளிக்க தயார் நிலையில் உள்ளனர். விபத்து ஏதும் ஏற்பட்டால் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்பு வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் 3 டிஎஸ்பி தலைமையில் 107 போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

02:06எம்எல்ஏ பந்து வீச, அமைச்சர் சிக்சர் அடிக்க; புதுக்கோட்டையில் விறு விறு கிரிக்கெட் போட்டி
02:21பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சதய விழா; கோலாகலமாக நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயம்
05:35கந்தர்வகோட்டை புனித செபஸ்தியார் ஆலய தை தேர் திருவிழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
07:28புதுக்கோட்டையில் நடைபெற்ற பழங்கால பொருட்கள் கண்காட்சியை வியந்து பார்த்த பொதுமக்கள்
04:45முடிஞ்சா தொட்டு பார்; வடமலாப்பூர் ஜல்லிக்கட்டில் வீரர்களை அலறவிட்ட விஜயபாஸ்கரின் கொம்பன் காளை
02:29ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள்; புதுக்கோட்டையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு
666:40கோவில் உண்டியலை தூக்கிச்சென்ற கொள்ளையர்கள்; கேமரா முன்பாக நக்கல் செய்துவிட்டு ஓட்டம்
03:56புயல் பாதிப்பில் இருந்து சென்னை மக்கள் விரைவில் மீள வேண்டும்; புதுக்கோட்டையில் விளக்கு பூஜை செய்து பிரார்த்தனை
09:51புதுக்கோட்டை அன்னவாசல் அரசு மருத்துவமனையில் அமைச்சர் சுப்பிரமணியன்; பறந்த உத்தரவு!!
00:36அரசுப்பள்ளி மாணவிகளுக்கு பாடம் நடத்திய கரூர் எம்.பி. ஜோதிமணி
Read more