பள்ளி மாணவிகள் உயிரிழந்த விவகாரம்; பெற்றோரின் காலில் விழுந்த தலைமை ஆசிரியை

பள்ளி மாணவிகள் உயிரிழந்த விவகாரம்; பெற்றோரின் காலில் விழுந்த தலைமை ஆசிரியை

Published : Feb 20, 2023, 02:34 PM IST

புதுக்கோட்டை அரசுப் பள்ளி மாணவிகள் 4 பேர் உயிரிழந்த விவகாரத்தில் பள்ளி இன்று மீண்டும் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் பள்ளியில் முறையிட்டதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

புதுக்கோட்டை அரசு நடுநிலைப்பள்ளி மாணவிகள் சில தினங்களுக்கு முன்பு பள்ளி விளையாட்டு போட்டிக்காக திருச்சி சென்று திரும்பினர். அப்போது கரூர் மாவட்டம் மாயனூர் ஆற்றில் குளித்த போது 4 மாணவிகள் அடுத்தடுத்து நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இந்த விவகாரத்தைத் தொடர்ந்து குறிப்பிட்ட பள்ளிக்கு தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் 4 நாட்களுக்குப் பின் பள்ளி இன்று மீண்டும் திறக்கப்பட்டது. பள்ளி திறக்கப்பட்டதை அறிந்த பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் பள்ளியில் முறையிட்டனர். எங்கள் குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் பிரேத பரிசோதனை அறிக்கை கூட இன்னும் எங்களுக்கு வழங்கப்படவில்லை.

மாணவிகளின் இறப்புக்கு காரணம் தெரியவில்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் நீங்கள் எவ்வாறு பள்ளியை திறக்கலாம் என்று பெற்றோர் முறையிட்டனர். அப்போது பள்ளி உதவி தலைமை ஆசிரியை பெற்றோரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார்.

02:06எம்எல்ஏ பந்து வீச, அமைச்சர் சிக்சர் அடிக்க; புதுக்கோட்டையில் விறு விறு கிரிக்கெட் போட்டி
02:21பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சதய விழா; கோலாகலமாக நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயம்
05:35கந்தர்வகோட்டை புனித செபஸ்தியார் ஆலய தை தேர் திருவிழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
07:28புதுக்கோட்டையில் நடைபெற்ற பழங்கால பொருட்கள் கண்காட்சியை வியந்து பார்த்த பொதுமக்கள்
04:45முடிஞ்சா தொட்டு பார்; வடமலாப்பூர் ஜல்லிக்கட்டில் வீரர்களை அலறவிட்ட விஜயபாஸ்கரின் கொம்பன் காளை
02:29ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள்; புதுக்கோட்டையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு
666:40கோவில் உண்டியலை தூக்கிச்சென்ற கொள்ளையர்கள்; கேமரா முன்பாக நக்கல் செய்துவிட்டு ஓட்டம்
03:56புயல் பாதிப்பில் இருந்து சென்னை மக்கள் விரைவில் மீள வேண்டும்; புதுக்கோட்டையில் விளக்கு பூஜை செய்து பிரார்த்தனை
09:51புதுக்கோட்டை அன்னவாசல் அரசு மருத்துவமனையில் அமைச்சர் சுப்பிரமணியன்; பறந்த உத்தரவு!!
00:36அரசுப்பள்ளி மாணவிகளுக்கு பாடம் நடத்திய கரூர் எம்.பி. ஜோதிமணி