VIDEO : ஆலங்குடி அரசு மருத்துவமனை ICU வார்டில் தீ விபத்து! 2 நோயாளிகள் பத்திரமாக மீட்பு!

VIDEO : ஆலங்குடி அரசு மருத்துவமனை ICU வார்டில் தீ விபத்து! 2 நோயாளிகள் பத்திரமாக மீட்பு!

Published : Jun 13, 2023, 12:01 PM IST

ஆலங்குடி அரசு மருத்துவமனையில் உள்ள ஐ சி யூ வார்டில் உயர் மின்னழுத்தம் காரணமாக திடீரென தீ பிடித்தது. அங்கிருந்த மருத்துவமனை ஊழியர்கள் சிகிச்சைக்காக இருந்த இரண்டு நோயாளிகளை உடனடியாக அப்புறப்படுத்தி தீயை அணைத்ததால் பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டது.
 

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன் முயற்சியால் சுமார் ஒரு கோடி ரூபாய் செலவில் ஐ சி யூ வார்டு அமைக்கப்பட்டது. இதனால் மாரடைப்பு போன்ற அவசர நோய்களுக்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக இருந்தது. இந்நிலையில் ஐ சி யூ வார்டில் மின்சாரம் சீராக இல்லை என்றும் அதனை சீரமைத்து தருமாறும் மருத்துவமனை நிர்வாகம் பலமுறை மின்சார வாரியத்தில் புகார் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் முறையான பராமரிப்பு இல்லாததால் நேற்று இரவு திடீரென ஐ சி யூ வார்டில் உயர் மின்னழுத்தம் காரணமாக தீப்பிடித்தது.



இதனால் அதிர்ச்சடைந்த மருத்துவமனை ஊழியர்கள் சிகிச்சைக்காக அங்கு இருந்த இரண்டு நோயாளிகளை உடனடியாக அப்புறப்படுத்தினர். மேலும் தீவிரமாக செயல்பட்டு உடனடியாக தீயை அணைத்தனர். இதனால் பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டது. இருப்பினும் மானிட்டர் போன்ற சில கருவிகள் தீயில் சேதமடைந்ததாக தெரிவித்துள்ளனர்.

இந்த ஐசியூ வார்டு அமைந்துள்ள பகுதியில் டயாலிசிஸ் மெஷின் அமைக்க முயற்சிகள் நடந்து வரும் நிலையில் உயர் மின்னழுத்தம் காரணமாக மருத்துவமனையில் தீப்பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

02:06எம்எல்ஏ பந்து வீச, அமைச்சர் சிக்சர் அடிக்க; புதுக்கோட்டையில் விறு விறு கிரிக்கெட் போட்டி
02:21பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சதய விழா; கோலாகலமாக நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயம்
05:35கந்தர்வகோட்டை புனித செபஸ்தியார் ஆலய தை தேர் திருவிழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
07:28புதுக்கோட்டையில் நடைபெற்ற பழங்கால பொருட்கள் கண்காட்சியை வியந்து பார்த்த பொதுமக்கள்
04:45முடிஞ்சா தொட்டு பார்; வடமலாப்பூர் ஜல்லிக்கட்டில் வீரர்களை அலறவிட்ட விஜயபாஸ்கரின் கொம்பன் காளை
02:29ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள்; புதுக்கோட்டையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு
666:40கோவில் உண்டியலை தூக்கிச்சென்ற கொள்ளையர்கள்; கேமரா முன்பாக நக்கல் செய்துவிட்டு ஓட்டம்
03:56புயல் பாதிப்பில் இருந்து சென்னை மக்கள் விரைவில் மீள வேண்டும்; புதுக்கோட்டையில் விளக்கு பூஜை செய்து பிரார்த்தனை
09:51புதுக்கோட்டை அன்னவாசல் அரசு மருத்துவமனையில் அமைச்சர் சுப்பிரமணியன்; பறந்த உத்தரவு!!
00:36அரசுப்பள்ளி மாணவிகளுக்கு பாடம் நடத்திய கரூர் எம்.பி. ஜோதிமணி
Read more