நாமக்கல் அடுத்த சேந்தமங்கலம் அருகே கார் பழகும் போது 80 அடி கிணற்றில் பாய்ந்த கார் பரிதாபமாக நீரில் மூழ்கி ராஜேந்திரன் என்பவர் உயிரிழந்தார்
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே தந்தைக்கு மகன் கார் ஓட்ட கற்றுகொடுக்க முயற்சி செய்துள்ளார். அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் 80 அடி கிணற்றில் விழுந்தது. இதில், ராஜேந்திரன் என்பவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.