Dinesh TG | Published: Oct 4, 2022, 4:34 PM IST
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் மக்கள் சிலர் பொது இடத்தில் குப்பைகளை கொட்டியுள்ளனர். பொது இடத்தில் குப்பை கொட்டாதீர்கள் என்று அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், அதனை யாரும் பொருட்படுத்தவில்லை. இந்நிலையில், ஆயுதபூஜையான இன்று குப்பை கொட்டப்பட்ட இடத்தில் சாமி படத்தை வைத்து ஆயுதபூஜை கொண்டாடினர்.