vuukle one pixel image

நாமக்கல்லில் அரசுப் பேருந்து ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் நூலிழையில் உயிர் தப்பிய நபர்

Velmurugan s  | Published: Oct 17, 2023, 4:34 PM IST

நாமக்கல் மாவட்டம் மக்கிரிபாளையம் நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்து ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது பக்கவாட்டு சாலையில் இருந்து சைக்கிளில் வந்த நபர் ஒருவர் பேருந்து வருவதை கவனிக்காமல் திடீரென சாலையின் குறுக்கே வந்தார். நல்வாய்ப்பாக அரசுப் பேருந்து ஓட்டுநர் துரிதமாக செயல்பட்டு பேருந்தை உடனடியாக சாலையின் எதிர் திசையில் திருப்பி சைக்கிள் மீது மோதாமல் தவிர்த்தார்.

அரசுப் பேருந்து ஓட்டுநரின் சாதுர்யத்தால் சைக்கிளில் வந்த நபர் உயிர் தப்பிய நிலையில், இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.