மரணத்திலும் பிரியாத அதே நேசம்; மயிலாடுதுறையில் கணவர் இறந்த துக்கத்தில் அதே நாளில் உயிரிழந்த மனைவி

மரணத்திலும் பிரியாத அதே நேசம்; மயிலாடுதுறையில் கணவர் இறந்த துக்கத்தில் அதே நாளில் உயிரிழந்த மனைவி

Published : Sep 28, 2023, 05:33 PM IST

மயிலாடுதுறை மாவட்டத்தில் கணவர் இறந்த துக்கத்தில் மனைவியும் அதே நாளில் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. 

மயிலாடுதுறை மாவட்டம் நல்லத்துக்குடி சிவன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 88). வயது மூப்பின் காரணமாக இவர் நேற்று மதியம் உயிரிழந்தார். இதையடுத்து நேற்று மதியம் முதல் அழுது கொண்டிருந்த இவரது மனைவி மருதாம்பாள் (83) நேற்று இரவு கிருஷ்ணமூர்த்தி சடலத்தின் மீது மயங்கி விழுந்தவர் அங்கேயே உயிரிழந்தார். 

தம்பதியினருக்கு 50 வருட தாம்பத்திய வாழ்க்கையின் அடையாளமாக இரண்டு பிள்ளைகள் உள்ளனர். வயோதிக தம்பதியினர் இருவரும் ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் கிராம மக்களிடையே சோகத்தையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

விஜயைச் சந்தித்த த.வெ.க. மாவட்ட செயலாளரைக் கொண்டாடிய தொண்டர்கள்!
01:42சீர்காழி அருகே பேருந்து நிலைத்தில் வசித்த முதியவர் மீட்பு: சமூக ஆர்வலருக்கு குவியும் பாராட்டுகள்!
01:59Nagore : நாகூர்.. திருடுபோன தங்க நகைகள்.. கைவரிசை காட்டி ஆட்டோவில் தப்பிய குற்றவாளி - போலீசார் அதிரடி!
01:16Nagai : பாட்டி மேல் கோபம்.. வீட்டை விட்டு வெளியேறிய சிறுவன் - விரைந்து செயல்பட்டு மீட்ட நாகை போலீசார்! Video!
02:07நாகை நகராட்சி அலுவலகத்தில் புகுந்து ரகளை செய்த திமுக கவுன்சிலரின் கணவர்; பேனரை அகற்றியதால் ஆவேசம்!!
03:15சாதி, மதம் பேதமின்றி நாள் முழுவதும் விநியோகிக்கப்பட்ட கறி சோறு; 200 ஆண்டுகளாக தொடரும் பாரம்பரியம்
03:36Ash Wednesday 2024: கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் இன்று சாம்பல் புதனுடன் துவங்கியது
03:01அவரு யோசிக்காம எந்த முடிவும் எடுக்க மாட்டார்; விஜய்யின் அரசியல் பயணம் குறித்து நடிகர் பாலா நச் பதில்
06:01மயிலாடுதுறையில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் கேனில் நீச்சல் அடித்த தவளை; வாடிக்கையாளர் அதிர்ச்சி
01:165 கொள்ளையர்கள் . . . 35 கி.மீ. சேசிங்; சினிமா காட்சிகளை மிஞ்சிய தமிழக போலீசாரின் அதிரடி வேட்டை