நாகூர் தர்காவில் கந்தூரி விழா நிறைவு பெற்று கொடி இறக்கம்

நாகூர் தர்காவில் கந்தூரி விழா நிறைவு பெற்று கொடி இறக்கம்

Published : Jan 07, 2023, 11:32 AM IST

நாகப்பட்டினம் மாவட்டம் உலக புகழ்பெற்ற நாகூர் தர்கா கந்தூரி விழா கொடி இறக்கத்துடன் நிறைவுபெற்றது. விழாவில் வண்ணமிகு வானவேடிக்கைகள் முழங்க 5 மினாராக்களிலும் ஒரே நேரத்தில் கொடிகள் இறக்கப்பட்டன.

நாகை மாவட்டம் நாகூரில் உள்ள உலக புகழ்பெற்ற  ஆண்டவர் தர்காவின் 466 -வது கந்தூரி விழா கடந்த டிசம்பர் மாதம் 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 1-ம் தேதி பீர் அமரவைத்தல், 2-ம் தேதி சந்தனகூடு ஊர்வலம், 3-ம் தேதி ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி, 4-ம் தேதி பீர் கடற்கரை செல்லும் நிகழ்ச்சிகள் வெகு விமரிசையாக நடைபெற்றன. 

இந்த நிலையில் 14 நாட்கள் நடைபெற்ற திருவிழாவின் கடைசி நாளான நேற்று தர்கா பரம்பரை கலிபா துவா ஓதிய பிறகு 5 மினாராவில் ஒரே நேரத்தில் கொடி இறக்கப்பட்டது. வண்ணமிகு வான வேடிக்கைகள், அதிர்வேட்டுகள் முழங்க ஒரே நேரத்தில் தர்காவின் 5 மினாராக்களிலும் கொடிகள் இறக்கப்பட்டன. இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

விஜயைச் சந்தித்த த.வெ.க. மாவட்ட செயலாளரைக் கொண்டாடிய தொண்டர்கள்!
01:42சீர்காழி அருகே பேருந்து நிலைத்தில் வசித்த முதியவர் மீட்பு: சமூக ஆர்வலருக்கு குவியும் பாராட்டுகள்!
01:59Nagore : நாகூர்.. திருடுபோன தங்க நகைகள்.. கைவரிசை காட்டி ஆட்டோவில் தப்பிய குற்றவாளி - போலீசார் அதிரடி!
01:16Nagai : பாட்டி மேல் கோபம்.. வீட்டை விட்டு வெளியேறிய சிறுவன் - விரைந்து செயல்பட்டு மீட்ட நாகை போலீசார்! Video!
02:07நாகை நகராட்சி அலுவலகத்தில் புகுந்து ரகளை செய்த திமுக கவுன்சிலரின் கணவர்; பேனரை அகற்றியதால் ஆவேசம்!!
03:15சாதி, மதம் பேதமின்றி நாள் முழுவதும் விநியோகிக்கப்பட்ட கறி சோறு; 200 ஆண்டுகளாக தொடரும் பாரம்பரியம்
03:36Ash Wednesday 2024: கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் இன்று சாம்பல் புதனுடன் துவங்கியது
03:01அவரு யோசிக்காம எந்த முடிவும் எடுக்க மாட்டார்; விஜய்யின் அரசியல் பயணம் குறித்து நடிகர் பாலா நச் பதில்
06:01மயிலாடுதுறையில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் கேனில் நீச்சல் அடித்த தவளை; வாடிக்கையாளர் அதிர்ச்சி
01:165 கொள்ளையர்கள் . . . 35 கி.மீ. சேசிங்; சினிமா காட்சிகளை மிஞ்சிய தமிழக போலீசாரின் அதிரடி வேட்டை