பேருந்தில் 22 சவரன் நகையை பறிகொடுத்த பெண்; 2 நாட்களில் ஆந்திரா வரை சென்று அதிரடி காட்டிய அதிகாரிகள்

பேருந்தில் 22 சவரன் நகையை பறிகொடுத்த பெண்; 2 நாட்களில் ஆந்திரா வரை சென்று அதிரடி காட்டிய அதிகாரிகள்

Published : Sep 30, 2023, 07:09 PM IST

மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில்  22 பவுன் தங்க நகை திருட்டு சிசிடிவி காட்சிகளை கொண்டு குற்றவாளிகளை ஆந்திராவில் கைது செய்த போலீசார் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள சோழம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சத்யா(வயது 31). கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு இவர்  பந்தநல்லூரில் உள்ள அம்மா வீட்டிற்கு செல்வதற்காக மயிலாடுதுறையில் இருந்து திருப்பனந்தாள் சென்ற தனியார் பேருந்தில் சென்றபோது பேருந்தின் கூட்ட நெரிசலில்  சத்யா கைப்பையில் வைத்திருந்த 22 சவரன் தங்க நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

இது குறித்து சத்யா அளித்த புகாரின் பேரில் மயிலாடுதுறை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து  பேருந்தின் உள்ளே உள்ள சிசிடிவி கேமரா வையும், பேருந்து நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் வைத்து விசாரணை மேற்கொண்டனர். இதில் கையில் குழந்தையை வைத்திருந்த ஒரு   இளம்பெண் நகையை திருடி செல்வது தெரிய வந்தது. 

கோவையில் தனியார் பள்ளியால் திடீரென அமைக்கப்பட்ட வேகத்தடை; பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்

இதனை அடுத்து அவரைப் பற்றி விசாரணை மேற்கொண்டதில் ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே சிறுதனூர் கிராமத்தைச் சேர்ந்த துர்கா என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் செல்வம் தலைமையில் தனிப்படை அதிகாரிகள் ஆந்திர மாநிலம் சென்று குற்றவாளியை கைது செய்ததுடன் ஒரு மரத்தடியில் புதைத்து வைத்திருந்த நகைகளையும் பறிமுதல் செய்தனர். சம்பவம் நடைபெற்று இரண்டு நாட்களில் குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்தது மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

விஜயைச் சந்தித்த த.வெ.க. மாவட்ட செயலாளரைக் கொண்டாடிய தொண்டர்கள்!
01:42சீர்காழி அருகே பேருந்து நிலைத்தில் வசித்த முதியவர் மீட்பு: சமூக ஆர்வலருக்கு குவியும் பாராட்டுகள்!
01:59Nagore : நாகூர்.. திருடுபோன தங்க நகைகள்.. கைவரிசை காட்டி ஆட்டோவில் தப்பிய குற்றவாளி - போலீசார் அதிரடி!
01:16Nagai : பாட்டி மேல் கோபம்.. வீட்டை விட்டு வெளியேறிய சிறுவன் - விரைந்து செயல்பட்டு மீட்ட நாகை போலீசார்! Video!
02:07நாகை நகராட்சி அலுவலகத்தில் புகுந்து ரகளை செய்த திமுக கவுன்சிலரின் கணவர்; பேனரை அகற்றியதால் ஆவேசம்!!
03:15சாதி, மதம் பேதமின்றி நாள் முழுவதும் விநியோகிக்கப்பட்ட கறி சோறு; 200 ஆண்டுகளாக தொடரும் பாரம்பரியம்
03:36Ash Wednesday 2024: கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் இன்று சாம்பல் புதனுடன் துவங்கியது
03:01அவரு யோசிக்காம எந்த முடிவும் எடுக்க மாட்டார்; விஜய்யின் அரசியல் பயணம் குறித்து நடிகர் பாலா நச் பதில்
06:01மயிலாடுதுறையில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் கேனில் நீச்சல் அடித்த தவளை; வாடிக்கையாளர் அதிர்ச்சி
01:165 கொள்ளையர்கள் . . . 35 கி.மீ. சேசிங்; சினிமா காட்சிகளை மிஞ்சிய தமிழக போலீசாரின் அதிரடி வேட்டை
Read more