சாலையில் நடந்து சென்ற சிறுமியை சுத்துபோட்ட தெரு நாய்கள்; பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி

சாலையில் நடந்து சென்ற சிறுமியை சுத்துபோட்ட தெரு நாய்கள்; பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி

Published : Aug 30, 2023, 09:49 AM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் சாலையில் நடந்து சென்ற சிறுமியை 3 நாய்கள் சேர்ந்து கடித்து காயப்படுத்திய வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 38வது வார்டு வாசவி நகர் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுமி ஒருவர் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும் நிலையில் அப்பகுதியில் சுற்றித்திரிந்த தெரு நாய் சிறுமியை துரத்தி கடிக்க ஆரம்பித்துள்ளது. அதனைத் தொடர்ந்து மேலும் அப்பகுதியில் சுற்றித்திரிந்த இரு தெரு நாய்களும் சிறுமியை சூழ்ந்து கடிக்க, சிறுமி நிலைகுலைந்து கீழே விழுந்ததும் மூன்று நாய்களும் சிறுமியை சூழ்ந்து கடித்துள்ளது. 

அப்பகுதியில் இருந்த சிலர் ஓடி வந்து நாய்களிடமிருந்து சிறுமியை காப்பாற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். நாய்கள் துரத்தி கடித்ததில் கீழே விழுந்து சிறுமிக்கு பலத்த காயம் ஏற்பட்டிருந்த நிலையில், சிறுமியின் தலைப் பகுதியில் 6 தையல்கள் போடப்பட்டுள்ளன. 

இந்நிலையில், இச்சம்பவம் அப்பகுதியில் உள்ள வீடு ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவாகி இருந்தது. தற்போது அந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் சிறுமி சிகிச்சைக்கு பின்னர் சீரான உடல்நிலையுடன் வீடு திரும்பிவிட்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

01:40Premalatha : "போதை தமிழகமாக மாற்றியுள்ளது திமுக அரசு" - ஓசூரில் அனல் பறக்க பிரச்சாரம் செய்த பிரேமலதா!
2000:00ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவதில் என்ன தவறு உள்ளது? ஓசூரில் ராமானுஜ ஜீயர் பேட்டி
00:50பாஜகவிற்கு தில்லு, தைரியம் இருந்தால் இதை செய்து காட்டுங்கள் - கே.பி.முனுசாமி பகிரங்க சவால்
02:00ஈஷா மையத்தின் ஆதியோகி சிவன் ரதத்திற்கு ஓசூரில் தேவாரம் பாடி சிவ பக்தர்கள் சிறப்பு வரவேற்பு
03:11ஆ.ராசாவுக்கு ஆப்பு.. பாஜக உடன் கூட்டணி? நடிகர் விஜய்க்கு வாழ்த்து.. அதிரடி காட்டும் இபிஎஸ்..!
03:01ஓசூரில் முதன்முறையாக நடைப்பெற்ற மார்கழியில் மக்களிசை, திரளான ரசிகர்கள் பங்கேற்பு
02:46கிருஷ்ணகிரியில் ரூ.19 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய பள்ளி கட்டிடங்களை திறந்து வைத்த எம்.பி. செல்லகுமார்
00:30வெயிலுக்கு இதமாக குடும்பத்தோடு ஏரியில் கும்மாளம் போடும் காட்டு யானைகள்
00:53சாலையில் நடந்து சென்ற சிறுமியை சுத்துபோட்ட தெரு நாய்கள்; பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி