அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிமுறை; கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் அகற்றப்படாத விளம்பரங்கள்

அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிமுறை; கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் அகற்றப்படாத விளம்பரங்கள்

Published : Mar 16, 2024, 06:39 PM IST

நாடு முழுவதும் அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அகற்றப்படாத மோடி மற்றும் ஸ்டாலின் படங்களுடன் கூடிய அரசுத் திட்டங்கள் குறித்த விளம்பர பதாகைகள்.

தமிழகம் உட்பட நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட அடுத்த நொடியே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததாக அர்த்தனம். இந்நிலையில், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள தமிழக அரசின் திட்டங்கள் குறித்த பிளக்ஸ் பேனர்கள், விளம்பர பதாகைகள் அகற்றப்படவில்லை.

அரசு திட்டங்கள் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோர் புகைப்படங்களுடன் இடம்பெற்றுள்ள விளம்பர பதாகைகள் அகற்றும் பணிகள் இதுவரை துவங்கவில்லை.

இதேபோல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில் முன்பு பிரதமர் மோடி புகைப்படத்துடன் வைக்கப்பட்டுள்ள மத்திய அரசின் சூரிய ஒளி மின்சார திட்டத்திற்கான விளம்பர பதாகையும் அகற்றவில்லை. பாராளுமன்ற தேர்தல் தேதி இன்று பிற்பகல் 3.00 மணிக்கு வெளியாகும் என்று நேற்றே அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

02:53 ஆஹா என்ன ஒரு கண்கொள்ளா காட்சி! கற்பக விநாயகருக்கு 1008 கிலோ காய்கறி மற்றும் பழங்களால் அலங்காரம்..!
08:46"திமுக தேர்தல் அறிக்கையை கசக்கி வீச வேண்டும்".. கரூரில் நடந்த பாஜக செயல்வீரர்கள் கூட்டம் - சீரிய அண்ணாமலை!
01:47சீரும், சிறப்புமாக நடைபெற்ற கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலய திருக்கல்யாண வைபவம்
01:22அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிமுறை; கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் அகற்றப்படாத விளம்பரங்கள்
03:08ஹெல்மெட்டோட வாங்க, டிபன் பாக்சோட போங்க; கரூர் போலிசார் விப்புணர்வு
03:10கரூரில் ஆட்சியருக்காக நீண்ட நேரம் வெயிலில் நிற்க வைக்கப்பட்ட மழலைகள்
03:56திமுகவில் வாரிசு இருக்கு.. உங்களுக்கு இல்லையா ஆஸ்பத்திரிக்கு போங்க.. பங்கமாக கலாய்த்த சிவாஜி கிருஷ்ணமூர்த்தி
01:35பயணிகளின் உயிரை பணயம் வைக்கும் ஓட்டுநர்கள்; கரூரில் நூலிழையில் உயிர் தப்பிய பயணிகள்
01:36கோவிந்தா கோஷம் விண்ணை பிளக்க கரூரில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேவை வடம் பிடித்து இழுத்தனர்