ஈரோட்டில் உரிமையாளர்களிடையே மோதல்; உணவகம் தீ வைத்து எரிப்பு

ஈரோட்டில் உரிமையாளர்களிடையே மோதல்; உணவகம் தீ வைத்து எரிப்பு

Published : Jan 08, 2023, 05:01 PM IST

ஹோட்டல் கடைக்காரர்களுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக உணவகத்திற்கு நள்ளிரவில் தீ வைத்த சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் நசியனூர் அருகே அருள்முருகன், சுகம் என இரு உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இரு உணவகங்களையும் அர்ஜுனன் கோவேந்திரன் என இருவர் நடத்தி வருகின்றனர். உணவகம் முன்பாக நாய் ஒன்று படுத்து இருந்தது தொடர்பாக இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. தகராறு காரணமாக இரு தரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் அளிக்க இருந்த இருந்தனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவில் காரில் வந்த மர்மக்கும்பல் அருள் முருகன் உணவகத்தின் மீது மர்ம பொருளை வீசி தீ பிடிக்க வைத்தது.

இதில் உணவகம் முழுவதும் எரிந்து நாசமானது. இதனைத் தொடர்ந்து பெருந்துறை தீயணைப்பு துறையினர் நேரில் சென்று தீயை கட்டுப்படுத்தினர். இது தொடர்பாக அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி சித்தோடு காவல் துறையினர் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

03:22Train : "இது என்ன சதாப்திக்கு வந்த சோதனை".. கனமழையால் Super Fast ரயிலில் ஒழுகிய மழை நீர் - மக்கள் அவதி! Video!
01:35சத்தியமங்கலம் அடுத்த தாளவாடியில் பெய்த திடீர் கோடை மழை.. பொதுமக்கள் மகிழ்ச்சி.!!
12:19மோடி எத்தனைமுறை தமிழகம் வந்தாலும் பாஜகவிற்கு யாரும் வாக்களிக்கப் போவதில்லை - தேர்தல் பிரச்சாரத்தில் கனிமொழி!
00:58சத்தியமங்கலம் வனப்பகுதியில் கடும் வறட்சி! மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் உலா வரும் காட்டு யானைகள் கூட்டம்.!
02:06வாக்காளர்களுக்கு விநியோகிக்க கோவையில் இருந்து எடுத்து வரப்பட்ட 13 கி. வெள்ளி? அதிகாரிகள் அதிரடி சோதனை
10:06நான் தேர்தலில் போட்டியிடுவேன்.. ஆனால் ஒரு கண்டிஷன்.. பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச். ராஜா பேட்டி!
02:04பரிசலில் ஆடி அசைந்து மறுகரை வந்த பண்ணாரி மாரியம்மன்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடியிருந்து வரவேற்பு
02:19திமுக ஒன்றிய செயலாளர் கொலை.. குற்றவாளிகள் ஐந்து பேர் சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் சரண்..
02:11பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற ஆம்னி வேன் மீது மோதிய தனியார் பேருந்து.. ஈரோடு அருகே பரபரப்பு
00:43ஈரோட்டில் லாரியை வழிமறித்து கரும்புகளை ருசி பார்த்த காட்டு யானை; ஓட்டுநரை துரத்தி அட்ராசிட்டி
Read more