அமைச்சர் சொல்லி தான் கூடுதலா பணம் வாங்றோம்; டாஸ்மாக் ஊழியரின் பேச்சால் பரபரப்பு

Aug 12, 2023, 9:26 AM IST

ஈரோடு மாவட்டம்ம புளியம்பட்டி அருகே எரங்காட்டுபாளையம் பகுதியில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு பகுதிகளில் இருந்து மதுப்பிரியர்கள் மது அருந்துவது வழக்கம். இந்த நிலையில் நேற்று மதுபான கடை திறந்தவுடன் வந்த வாடிக்கையாளர் 130 விலையுள்ள மதுபானத்தை வாங்கியுள்ளார். அதற்கு விற்பனையாளர் நடராஜ் என்பவர் கூடுதலாக ஐந்து ரூபாய் கேட்டுள்ளார். ஐந்து ரூபாய் கொடுக்காவிட்டால் மது தர முடியாது எனவும், இதை யாரிடம் வேண்டுமானாலும் சொல்லலாம். வீடியோ மூலமாக அரசு அதிகாரி அமைச்சர்கள் யாரிடம் வேணா தெரிவித்துக் கொள்ளலாம் என நடராஜ் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது

மதுபான பாட்டில்களை  அமைச்சர் தான் ஐந்து ரூபாய் கூடுதலாக வாங்க கூறினார் என கூறியதால் அதிர்ச்சி அடைந்த மது பிரியர் தான் கொடுத்த பணத்திலிருந்து பத்து ரூபாயை மீண்டும் கேட்டுள்ளார். இதை தர மறுத்த விற்பனையாளர் நடராஜ் யாரிடம் வேணாலும் கூறிக்கொள் அதைப்பற்றி கவலை இல்லை. மதுவை கூலிங்காக வைப்பதற்கு கரண்ட் பில் கொடுப்பதற்காக ஐந்து ரூபாய் கூடுதலாக வசூலிப்பதாகவும் அதுபோக மதுபான கடை இடத்திற்கு சொந்தமான உரிமையாளருக்கு மாதம் வாடகை கொடுக்கவும் ஐந்து ரூபாய் கூடுதலாக வசூலிப்பதாக கூறியதால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.