வனத்துறை சார்பில் அமைக்கப்பட்ட தொட்டியில் தண்ணீரை பார்த்ததும் குடும்பத்துடன் கும்மாளம் போடும் காட்டு யானைகள்

Feb 24, 2024, 12:50 PM IST

தமிழகத்தில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், நீர் நிலைகளில் தண்ணீர் வற்றத் தொடங்கி உள்ளது. இதனால் வனப்பகுதியில் உள்ள விலங்குகள் தண்ணீர், உணவு தேடி குடியிருப்புகளுக்கு படையெடுக்கும் சூழல் உள்ளது. இதனை தவிர்க்கும் விதமாக தமிழக வனத்துறை சார்பாக வனப்பகுதிகளில் ஆங்காங்கே செயற்கையாக தண்ணீர் தொட்டி அமைத்து அவ்வபோது அதில் தண்ணீர் நிரப்பி வருகிறது.

இதனால் வனவிலங்குகள் ஊருக்குள் வருவது தவிர்க்கப்படுவதோடு அவற்றின் தேவையும் வனப்பகுதிக்குள்ளேயே நிறைவு செய்யப்படுகிறது. அந்த வகையில் ஆழியாறு வனப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் தெரட்டியில் தண்ணீர் இருப்பதை கண்ட காட்டு யானை கூட்டம் ஒன்று தனது குட்டிகளுடன் தண்ணீர் குடித்தும், அதில் விளையாடியும் கும்மாளம் போடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.