Shocking Video: நொடிப்பொழுதில் சூழ்ந்துகொண்ட தெருநாய்கள்; கண்ணிமைக்கும் நேரத்தில் சிறுவனை காப்பாற்றிய தந்தை

Shocking Video: நொடிப்பொழுதில் சூழ்ந்துகொண்ட தெருநாய்கள்; கண்ணிமைக்கும் நேரத்தில் சிறுவனை காப்பாற்றிய தந்தை

Published : Jun 29, 2024, 07:40 PM IST

குழந்தையை சுற்றிவளைத்த தெரு நாய்களிடமிருந்து கனப்பொழுதில் காப்பாற்றிய தந்தையின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல்.

கோவை மாவட்டம், வெள்ளலூர் மகாலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் முன் நிறுத்திவிட்டு, தனது மகனை இறக்கி விட்டு விட்டு வீட்டுக்குள் சென்றார். அப்போது அப்பகுதியில் இருந்த நான்கு தெருநாய்கள் குழந்தையை நோக்கி குறைத்தபடி ஓடி வந்துள்ளன. இத்தனை பார்த்த அந்த சிறுவன், அச்சமின்றி கீழே கிடந்த கல்லை எடுத்து நாய்களை விரட்ட முயன்றுள்ளான். 

ஆனால் அதற்கெல்லாம் அஞ்சாத தெரு நாய்கள் சில நொடிகளில், சிறுவனை சுற்றிவளைத்தன. தெருநாய்கள் சுற்றி வளைப்பதை பார்த்து சிறுவன், கூச்சலிடவே, கூச்சல் சத்தம் கேட்டு வீட்டுக்குள் சென்று கொண்டிருந்த தந்தை விரைந்து வந்து சிறுவனை மீட்ட நிலையில், அங்கிருந்து தெருநாய்கள் வந்த வேகத்தில் திரும்பின. இந்த  காட்சிகள் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. 

அண்மைக்காலமாக தெரு நாய்கள் குழந்தைகளை கடிக்கும் சம்பவங்கள் தொடர்ச்சியாக அரங்கேறி வரும் நிலையில், குழந்தைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதோடு மாநகராட்சி அதிகாரிகள் தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்பது பொதுமக்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாக உள்ளது.

02:13BJP : பொள்ளாச்சி.. தொழில் வர்த்தக சபை தலைவர் மறைவு - நேரில் சென்று குடும்பத்தாருக்கு ஆறுதல் சொன்ன அண்ணாமலை!
00:39Shocking Video: நொடிப்பொழுதில் சூழ்ந்துகொண்ட தெருநாய்கள்; கண்ணிமைக்கும் நேரத்தில் சிறுவனை காப்பாற்றிய தந்தை
00:58Kovai Kutralam: மலைகளுக்கு நடுவே ஆர்ப்பரித்து கொட்டும் அருவி; கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளுக்கு தடை
00:59"அட நானும் வாக்கிங் தான் வந்தேன்".. இரவு நேரத்தில் ஷாக் கொடுத்த காட்டு யானை - தெறித்து ஓடிய தம்பதி! Video!
00:58Coimbatore: முன்னே செல்வது யார்? ஆட்சியர் அலுவலகம் முன்பாக மல்லுகட்டிய அரசு, தனியார் பேருந்து ஓட்டுநர்கள்
01:00Shocking Video in Coimbatore: சாலையில் நடந்து சென்ற முதியவரை ஆக்ரோஷமாக மித்து தள்ளிய காட்டு யானை
02:16மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை.. குன்னூர் சாலையில் முறிந்து விழுந்த மரம் - போக்குவரத்து பாதிப்பு! Video!
கோவையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் களைகட்டிய முப்பெரும் விழா! கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்பு!
00:26Rainbow Coimbatore : கோவையில் சில்லென்ற வானிலை.. விண்ணை அலங்கரித்த இரு வானவில் - இணையத்தில் வைரலாகும் வீடியோ!
Read more