Viral Video : கோவை பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு!

Viral Video : கோவை பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு!

Published : Sep 23, 2022, 12:46 PM IST

கோவையில் மாருதி செலக்சன் துணிக்கடையில் பெட்ரோல் குண்டு வீசும் சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை
 

கோவை சித்தாபுதூர் பகுதியில் நேற்று இரவு பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் நிரப்பிய பாட்டில் வீசப்பட்டது. அப்போது கட்சி பிரமுகர்கள் சிலர் தரைத்தளத்திற்கு முன்பு நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள், தாங்கள் கொண்டு வந்திருந்த பாட்டிலை தூக்கி, கட்சி அலுவலகத்தை நோக்கி வீசிவிட்டு வேகமாக தப்பிச் சென்றனர். பாஜக அலுவலகத்திற்கு அருகே உள்ள மின்கம்பம் மீது விழுந்தது இந்த பெட்ரோல் குண்டு வெடிக்கவில்லை, இதனால் யாருக்கும் எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை. இதே போல கோவை ஒப்பணக்கார தெருவில் உள்ள துணிக் கடை மீதும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இது குறித்து சிசிடிவி காட்சிகளை வைத்து போலீஸார் விசாரித்து வருகிறார்கள். மேலும் இந்த பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 3 பேரிடம் விசாரணை நடத்தப்படுகிறது. இந்த சம்பவத்தை கண்டித்து பாஜகவினர் பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 

திருப்பரங்குன்றம் விவகாரம்: கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்திய இந்திய முன்னணியினர் கைது!
02:13BJP : பொள்ளாச்சி.. தொழில் வர்த்தக சபை தலைவர் மறைவு - நேரில் சென்று குடும்பத்தாருக்கு ஆறுதல் சொன்ன அண்ணாமலை!
00:39Shocking Video: நொடிப்பொழுதில் சூழ்ந்துகொண்ட தெருநாய்கள்; கண்ணிமைக்கும் நேரத்தில் சிறுவனை காப்பாற்றிய தந்தை
00:58Kovai Kutralam: மலைகளுக்கு நடுவே ஆர்ப்பரித்து கொட்டும் அருவி; கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளுக்கு தடை
00:59"அட நானும் வாக்கிங் தான் வந்தேன்".. இரவு நேரத்தில் ஷாக் கொடுத்த காட்டு யானை - தெறித்து ஓடிய தம்பதி! Video!
00:58Coimbatore: முன்னே செல்வது யார்? ஆட்சியர் அலுவலகம் முன்பாக மல்லுகட்டிய அரசு, தனியார் பேருந்து ஓட்டுநர்கள்
01:00Shocking Video in Coimbatore: சாலையில் நடந்து சென்ற முதியவரை ஆக்ரோஷமாக மித்து தள்ளிய காட்டு யானை
02:16மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை.. குன்னூர் சாலையில் முறிந்து விழுந்த மரம் - போக்குவரத்து பாதிப்பு! Video!
கோவையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் களைகட்டிய முப்பெரும் விழா! கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்பு!
00:26Rainbow Coimbatore : கோவையில் சில்லென்ற வானிலை.. விண்ணை அலங்கரித்த இரு வானவில் - இணையத்தில் வைரலாகும் வீடியோ!