கோவையில் மதுபோதை தலைக்கேறிய நிலையில் சாலையில் ரகளை செய்த இளைஞர்களை தட்டிக்கேட்ட நபர் மீது பட்டாசுகளை கொழுத்திப் போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை பீளமேடு கோபால்சாமி நாயுடு பின்புறம் முன்னாள் காங்கிரஸ் எம்பி பிரபு அவர்களுடைய பழமையான வீடு உள்ளது. தற்போது அங்கு யாரும் இல்லாததால் பாழடைந்துள்ளது. தீபாவளியான நேற்றுமுன் தினம் அந்த இடத்திற்கு இரவு ஆறு பேர் வந்து மது போதையில் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். அருகில் குடியிருக்கும், பாலசுந்தரம் கேள்வி கேட்டுள்ளார். இதனால் எரிச்சலடைந்த அந்த நபர்கள் பட்டாசை கொளுத்தி, அவர் வீட்டிற்குள்ளும், முகத்திலும் வீசியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து பீளமேடு போலீசில் புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது போன்ற செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல அந்த பகுதியில் ரோந்து பணிகளை முடுக்கி விட வேண்டும் எனவும் பாதிக்கப்பட்டவர் தெரிவித்துள்ளார்.