Watch : கால்நடைகளுடன் வாக்கிங் வந்த பாகுபலி யானை! மேலும் 3 காட்டு யானைகள் சுற்றி திரிவதால் பீதியில் மக்கள்!

Watch : கால்நடைகளுடன் வாக்கிங் வந்த பாகுபலி யானை! மேலும் 3 காட்டு யானைகள் சுற்றி திரிவதால் பீதியில் மக்கள்!

Published : May 18, 2023, 01:44 PM IST

மேட்டுப்பாளையம் அருகே சமயபுரம் கிராமத்தில் நடமாடும் 4 காட்டு யானைகளால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரத்திற்குட்பட்ட நெல்லிமலை அடிவாரத்தில் குரும்பூர், சமயபுரம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இதனிடையே வனப்பகுதியில் இருந்து காட்டுயானை, காட்டுப்பன்றி உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உணவு குடிநீர் தேடி குடியிருப்பு, விளை நிலங்களில் நுழைந்து பொதுமக்களையும் விவசாயிகளையும் அச்சுறுத்தி வருகின்றன.

வனப்பகுதியில் கடந்த சில மாதங்களாக காட்டு யானை பாகுபலியுடன்‌கூடுதலாக 3 காட்டுயானைகள் நடமாடி வருகின்றன. குறிப்பாக அதிகாலை நேரத்திலும் மாலை நேரத்திலும் சமயபுரம் கிராமத்தில் உள்ள கிராம சாலையை கடந்து செல்கிறது. ஊருக்கு மத்தியில் உள்ள இந்த சாலையில் தினமும் காலை மாலை எனு உலாவரும் காட்டு யானைகளால் இன்று சற்று மாறுபட்டு கால்நடைகளுடன் வாக்கிங் வந்தது.

மாடுகள் வனத்தை ஒட்டிய பகுதிகளில் மேய்ச்சலுக்கு சென்று விட்டு திரும்பி ஊருக்குள் வந்த போது அந்த பசுமாடுகளை பின்தொடர்ந்து காட்டு யானை பாகுபலி மட்டுமல்லாமல் மற்ற யானைகளும் வாக்கிங் வருவது போல் பசு மாடுகளுக்கு எந்த அச்சுறுத்தலும் இன்றி ஒய்யாரமாக நடந்து வந்ததை அந்த பகுதி மக்கள் ஆச்சரியமாகவும் சற்று அச்சத்துடன் பார்த்தனர்.

இப்பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் இதுவரை காட்டு யானை பாகுபலி யாரையும் தாக்கியதில்லை என்பதால் சமயபுரம் பகுதி மக்களின் ஒரு குடும்ப நபராகவே மாறிவருகிறது. இதிலும் ஒருசில யானைகள் அச்சத்தில் குடியிருப்புக்குள் அங்கும் இங்கும் ஓடுவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

திருப்பரங்குன்றம் விவகாரம்: கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்திய இந்திய முன்னணியினர் கைது!
02:13BJP : பொள்ளாச்சி.. தொழில் வர்த்தக சபை தலைவர் மறைவு - நேரில் சென்று குடும்பத்தாருக்கு ஆறுதல் சொன்ன அண்ணாமலை!
00:39Shocking Video: நொடிப்பொழுதில் சூழ்ந்துகொண்ட தெருநாய்கள்; கண்ணிமைக்கும் நேரத்தில் சிறுவனை காப்பாற்றிய தந்தை
00:58Kovai Kutralam: மலைகளுக்கு நடுவே ஆர்ப்பரித்து கொட்டும் அருவி; கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளுக்கு தடை
00:59"அட நானும் வாக்கிங் தான் வந்தேன்".. இரவு நேரத்தில் ஷாக் கொடுத்த காட்டு யானை - தெறித்து ஓடிய தம்பதி! Video!
00:58Coimbatore: முன்னே செல்வது யார்? ஆட்சியர் அலுவலகம் முன்பாக மல்லுகட்டிய அரசு, தனியார் பேருந்து ஓட்டுநர்கள்
01:00Shocking Video in Coimbatore: சாலையில் நடந்து சென்ற முதியவரை ஆக்ரோஷமாக மித்து தள்ளிய காட்டு யானை
02:16மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை.. குன்னூர் சாலையில் முறிந்து விழுந்த மரம் - போக்குவரத்து பாதிப்பு! Video!
கோவையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் களைகட்டிய முப்பெரும் விழா! கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்பு!
00:26Rainbow Coimbatore : கோவையில் சில்லென்ற வானிலை.. விண்ணை அலங்கரித்த இரு வானவில் - இணையத்தில் வைரலாகும் வீடியோ!