புதுச்சேரியில் ஆட்சியும் அதிகாரமும் அதிகாரிகளின் கையில் உள்ளது! - எதிர்கட்சித் தலைவர் சிவா குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் ஆட்சியும் அதிகாரமும் அதிகாரிகளின் கையில் உள்ளது! - எதிர்கட்சித் தலைவர் சிவா குற்றச்சாட்டு!

Published : May 09, 2023, 10:53 AM IST

புதுச்சேரியில் ஆட்சியும் அதிகாரமும் அதிகாரிகளின் கையில் உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சிவா பகிரங்கமாக குற்றச்சாட்டியுள்ளார்.
 

புதுச்சேரி அரசு ஊழியர்கள் சங்கங்களின் சம்மேளனத்தின் மறைந்த முன்னாள் கவுரவ தலைவர் பாலமோகனின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி தனியார் உணவகத்தில் நடைபெற்றது.

அரசு ஊழியர் சம்மேளன பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த நினைவேந்த நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா மற்றும் மூத்த தொழிற்சங்க தலைவர் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பாலமோகனனுக்கு அஞ்சலி செலுத்தி உரையாற்றினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் சிவா, புதுச்சேரியில் அரசும், அதிகாரமும் அதிகாரிகளின் கையில் உள்ளது, ஆட்சி அதிகாரங்களை இன்றைக்கு அதிகாரிகள் நடைமுறைப்படுத்தும் நிலைமையில் உள்ளது. இந்த நிலைமை மாற வேண்டும் என்றார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மக்கள் கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும், ஆனால் இதற்கு முடியாத சூழ்நிலை புதுச்சேரியில் உள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.



நிகழ்ச்சியில் அரசு ஊழிய சம்மேளன நிர்வாகிகள் அரசு ஊழியர்கள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்

பொதுமக்களுக்கு குட்நியூஸ்! பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிப்பு! எவ்வளவு தெரியுமா?
புதுச்சேரி இலக்கியத் திருவிழா 2024: இந்தியாவில் வறுமை ஒழிப்பு பற்றி ஷமிகா ரவி பேச்சு
புதுச்சேரி இலக்கியத் திருவிழாவில் ஶ்ரீ அரவிந்தரின் 'ஆர்யா' இதழ் குறித்து சுப்ரமணி ராமசாமி பேச்சு
"விளம்பரத்துக்காக வீணாகும் மக்கள் பணம்" Pondy Lit Fest 2024ல் அனல் பறந்த விவாதம்!
இந்தியாவில் சாதிய பாகுபாடு தோன்றியது எப்போது? Pondy Lit Fest 2024ல் மனம் திறந்த அரவிந்தன்!
"புதிய இந்தியா" அதுவே பாரத் சக்தியின் நோக்கம் - Pondy Lit Fest 2024ல் பேசிய ஆளுநர் ரவி!
உங்க அக்கப்போருக்கு அளவே இல்லையா? நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அலறவிட்ட இளைஞர்கள்!
இளமை திரும்புதே; ஸ்டைலாக பைக்கில் வந்து வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
01:29புதுச்சேரி துணைநிலை ஆளுநரை பூங்கொத்து கொடுத்து வரவேற்று முதல்வர் ரங்கசாமி
01:31புதுவையில் இரிடியம் கடத்தலா? நாராயண சாமியிடம் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் - அதிமுக