Nov 22, 2023, 2:09 PM IST
புதுச்சேரி மாநில அதிமுக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற கட்சித் தலைவருமான அன்பழகன் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் டிஜிபியை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது, கடந்த 4ம் தேதி காலாப்பட்டு சோலாரா ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்த விபத்தில் 14 பேர் 50 சதவீதத்துக்கும் அதிகமான கடுமையான தீக்காயங்களுக்கு ஆளாகியுள்ளனர். இந்த விபத்தில் இரண்டு தொழிலாளர்கள் இறந்துள்ளனர். அதன் உண்மைகளும் மூடி மறைக்கப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் தொழிற்சாலை நிர்வாகத்தின் மீது காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
என்னை மறுபடியும் பழைய மூர்த்தியா மாத்தீடாதீங்க; அதிகாரிகளின் செல்பாட்டால் அமைச்சர் ஆவேசம்
அந்த புகார் மீது இதுவரை எந்தவித வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. இதனால் தொழிற்சாலைகள் சட்டவிரோத செயலுக்கு ஆட்சியாளர்கள் துணை போவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. தொழிற்சாலை நிர்வாகத்தின் மீது கொடுக்கப்பட்ட புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்காத காலாப்பட்டு காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு இருந்தது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D