script type="application/ld+json"> { "@context": "https://schema.org", "@type": "WebSite", "name": "Asianet News Tamil", "url": "https://tamil.asianetnews.com", "potentialAction": { "@type": "SearchAction", "target": "https://tamil.asianetnews.com/search?topic={search_term_string}", "query-input": "required name=search_term_string" } }

WATCH : தியாகத் திருநாள்! - புதுவையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கூடி சிறப்பு தொழுகை!

Jun 29, 2023, 10:30 AM IST

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ஆண்டுதோறும் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு புதுச்சேரி மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் தொழுகை நடத்துவது வழக்கம், அதன்படி இன்று கடற்கரை சாலை காந்தி திடலில் ஈதுல் அல்கா என்று சொல்லக்கூடிய ஈகை பெருநாள் தொழுகை நடத்தப்பட்டது.

இதில் புதுச்சேரி மட்டும் இன்றி பல்வேறு பகுதிகளைச் சார்ந்த இஸ்லாமியர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டனர்.

இது குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் புதுச்சேரி மாவட்ட தலைவர் அபிப் ரகுமான் கூறும் போது, கடந்த 12 ஆண்டுகளாக ஈகை திருநாளை முன்னிட்டு தொழுகை நடத்தி இறைவனின் கட்டளையை நிறைவேற்றி வருகிறோம் அதன் படி இந்த ஆண்டு ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தொழுகை நடத்தி உள்ளோம் இதன் பிறகு இறைவன் கட்டளை கட்டளையின் படி உணவுகள் மட்டும் தானங்கள் கொடுத்து உதவ உள்ளதாக அவர் தெரிவித்தார்.