vuukle one pixel image

சிறுமிக்கு நியாயம் கிடைக்கும் வரை போராட்டம் ஓயாது - புதுவையில் அதிமுக செயலாளர் அன்பழகன்

Velmurugan s  | Published: Mar 8, 2024, 6:18 PM IST

புதுச்சேரியில் 9 வயது சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து அதிமுக சார்பில் முழு போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதுச்சேரியில் அதிமுகவினர் உப்பளம் அலுவலகத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் கட்சிக் கொடியுடன் ஊர்வலமாக வந்தனர். வழியில் திறந்திருந்த சில கடைகள் மற்றும்  பெட்ரோல் பங்குகளை மூடுமாறு அவர்கள் அறிவுறுத்திய வண்ணம் வந்தனர்.

அண்ணா சிலை அருகே வந்தபோது இவர்கள் நான்கு முனை சாலையை மறித்து சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து மாநில செயலாளர் அன்பழகன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். முழு அடைப்பு போராட்டத்துடன் இந்தப் பிரச்சினை ஓயாது, சிறுமியின் படுகொலைக்கு காரணமானவர்கள் அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்கப்படும் வரை போராட்டம் தொடரும் என அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் தெரிவித்தார்.