இன்று வெளியாகிறது புதிய அமைச்சர்கள் லிஸ்ட்.! நீக்கப்படுவது யார்? புதிதாக சேர்க்கப்படுவது யார்.?

Published : Apr 27, 2025, 03:00 PM ISTUpdated : Apr 27, 2025, 03:14 PM IST

தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து அமைச்சரவையில் ஐந்து முறை மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி ராஜினாமா செய்ய வாய்ப்புள்ளதாகவும், பொன்முடி, கயல்விழி உள்ளிட்டோரும் நீக்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

PREV
14
இன்று வெளியாகிறது புதிய அமைச்சர்கள் லிஸ்ட்.! நீக்கப்படுவது யார்? புதிதாக சேர்க்கப்படுவது யார்.?

 Tamil Nadu cabinet reshuffle : திமுக தமிழகத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு ஆட்சியை பிடித்து 4 வருடங்களை எட்டியுள்ளது. இந்த கால கட்டத்தில் தமிழக அமைச்சரைவையில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்றுள்ளது.  5 முறை மாற்றங்களை சந்தித்துள்ளது. இதன் படி அமைச்சரவையில் புதிதாக இடம்பிடித்த உதயநிதி துணை முதலமைச்சராகவும் பதவியேற்றுள்ளார்.

3 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த டி.ஆர்.பி.ராஜாவுக்கு அமைச்சர் பொறுப்பும், எடப்பாடி பழனிசாமி கோட்டையில் தனித்து வெற்றி பெற்ற  சேலம் ராஜேந்திரனுக்கு அமைச்சரவை பதவியும் வழங்கப்பட்டது. இதே போல  கோவி. செழியன், நாசர் ஆகியோரும் அமைச்சரவையில் இணைந்துள்ளனர்.

24
Senthil Balaji resignation

சிக்கலில் செந்தில் பாலாஜி

அதே நேரம்,  அமைச்சர்களாக இருந்த செஞ்சி மஸ்தான், மனோ தங்கராஜ் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி ஆகியோர் நீதிமன்ற உத்தரவால் அமைச்சர் பதவியை இழந்து மீண்டும் தற்போது அமைச்சர்களாக நீடித்து வருகிறார்கள். இந்த நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாத காலமே உள்ள நிலையில் தற்போது அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுக்கு சிக்கல் உருவாகியுள்ளது.

அதன் படி, முறைகேடு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியது. இதனை தொடர்ந்து சிறையில் இருந்து வெளியே வந்தவர் அடுத்த சில நாட்களில் அமைச்சராக பொறுப்பேற்றார். இதற்கு தற்போது உச்சநீதிமன்றம் செக் வைத்துள்ளது. 
 

34
MK Stalin RN Ravi

நீக்கப்படும் அமைச்சர்கள் யார்.?

ஜாமினில் தொடர வேண்டுமா.? அல்லது அமைச்சராக இருக்க வேண்டுமா.? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. வருகிற 28ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே ஜாமினில் தொடரவே செந்தில் பாலாஜி விரும்புவதால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

எனவே உச்சநீதிமன்றத்தில் நாளை வழக்கு வரவுள்ள காரணத்தால் இன்று அமைச்சரவை மாற்ற ஆளுநருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் தற்போது உள்ள அமைச்சர்களில் செந்தில் பாலாஜி, பொன்முடி மற்றும் கயல் விழி ஆகியோர் நீக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது,

44
DMK cabinet reshuffle

புதிதாக யாருக்கு வாய்ப்பு.?

மின்சாரத்துறை அமைச்சர் பி டி ஆர் அல்லது தங்கம் தென்னரசுக்கு வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமிக்கு கூடுதல் பொறுப்பாகவும், பொன்முடியிடம் இருந்து பறிக்கப்படும் வனத்துறை உதயசூரியன் அல்லது லட்சுமணனுக்கு வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் தமிழரசி, துரை சந்திரசேகர் ஆகியோரின் பெயர்கள் அமைச்சரவைக்கு பரிசீலிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.  எனவே ஆளுநர் இன்று மாலை உதகையில் இருந்து சென்னை திரும்பியதும் அமைச்சரவை மாற்றம் தொடர்பாக தகவல் வெளியாகும் என கூறப்படுகிறது. 

Read more Photos on
click me!

Recommended Stories