மிகப்பெரிய அவமானம் இது; பஹல்காம் தாக்குதல் குறித்து ட்வீட் போட்ட ஷாருக்கானை வறுத்தெடுத்த பிரபலம்

Published : Apr 27, 2025, 02:28 PM IST

பஹல்காம் தாக்குதல் சம்பவம் குறித்து ட்வீட் போட்ட நடிகர் ஷாருக்கானை இன்போசிஸ் முன்னாள் அதிகாரியான மோகன்தாஸ் பாய் கடுமையாக விமர்சித்துள்ளார்.

PREV
14
மிகப்பெரிய அவமானம் இது; பஹல்காம் தாக்குதல் குறித்து ட்வீட் போட்ட ஷாருக்கானை வறுத்தெடுத்த பிரபலம்

Mohandas Pai slams Shah Rukh Khan : ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ந் தேதி நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டனர், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பைசரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் கூடியிருந்தபோது இந்தத் கொடூர தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. பயங்கரவாதிகள் முதலில் சுற்றுலாப் பயணிகளிடம் அவர்களின் பெயர்களையும் மதத்தையும் கேட்டு, பின்னர் இஸ்லாமியர் அல்லாதவர்களைக் குறிவைத்துத் தாக்கியுள்ளனர். 

24
Pahalgam attack

நாட்டையே உலுக்கிய பஹல்காம் தாக்குதல்

இந்தத் தாக்குதல் சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதற்கு சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் இருந்தும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. தாக்குதல் சம்பவத்தை அடுத்து தேடுதல் வேட்டையைத் தொடங்கிய பாதுகாப்புப் படையினர், 100க்கும் மேற்பட்ட சந்தேகத்திற்குரிய நபர்களைக் கைது செய்தனர். பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை கண்டித்து ஏராளமான திரைப்பிரபலங்களும் பதிவிட்டனர். அந்த வகையில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் போட்ட கண்டன பதிவு சர்ச்சையில் சிக்கி உள்ளது. 

இதையும் படியுங்கள்... பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி: 14 பயங்கரவாதிகளின் வீடுகள் தகர்ப்பு

34
Shah Rukh Khan

ஷாருக்கானின் எக்ஸ் தள பதிவு

அவர் தன்னுடைய எக்ஸ் தளத்தில், “பஹல்காமில் நடந்த மனிதாபிமானமற்ற தாக்குதலில் ஏற்பட்ட துக்கத்தையும், கோபத்தையும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இதுபோன்ற நேரங்களில், கடவுளிடம் பிரார்த்திப்பதும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக பிரார்த்திப்பதும், எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதும் மட்டுமே என்னால் செய்ய முடியும். ஒரு நாடாக நாம் ஒற்றுமையாக நின்று, இந்தக் கோழைத்தனமான தாக்குதலுக்கு எதிராக நீதி கிடைக்கச் செய்ய வேண்டும்” என்று ஷாருக் பதிவிட்டு இருந்தார்.

44
Mohandas Pai X Post

ஷாருக்கானை விமர்சித்த மோகன்தாஸ் பாய்

ஷாருக்கானின் இந்த பதிவை விமர்சித்து இன்போசிஸ் முன்னாள் அதிகாரியான மோகன்தாஸ் பாய் பதிவிட்டுள்ளதாவது : “மதத்தின் பெயரால் அப்பாவி இந்துக்களை கொன்றதற்காக பாகிஸ்தானைச் சேர்ந்த இஸ்லாமியர்களை ஜிஹாதி பயங்கரவாதிகள் என்று அழைக்காதது பெரிய அவமானம் ஷாருக்கான். நேர்மையும், அர்த்தமும் இல்லாத போலி வார்த்தைகளால் மறைக்க முயற்சிக்கிறீர்கள். ஜிஹாதி பயங்கரவாதிகளைக் கண்டிக்க ஒரு இந்தியராக ஒரு முறையாவது எழுந்து நில்லுங்கள் ஷாருக். பொய் சொல்வதை நிறுத்துங்கள். உங்களுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால், உங்கள் நாட்டு ஆண்கள் மற்றும் பெண்களின் நம்பிக்கைக்காக எழுந்து நில்லுங்கள். இதுபோன்ற விஷயங்களில் நயவஞ்சகராகவும் போலியாகவும் இருப்பதை நிறுத்துங்கள்” என சாடி உள்ளார்.

இதையும் படியுங்கள்... பஹல்காம் தாக்குதல்! களமிறங்கிய என்ஐஏ! சாட்சிகளிடம் விசாரணை!

Read more Photos on
click me!

Recommended Stories