விஜய் வருகையால் ஸ்தம்பித்த கோவை; தவெக-வினர் மீது போலீசார் வழக்குப்பதிவு

Published : Apr 27, 2025, 01:43 PM IST

கோவையில் நடைபெற்ற பூத் கமிட்டி மீட்டிங்கில் கலந்துகொள்ள நடிகர் விஜய் வந்திருந்த நிலையில், அப்போது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக தவெக-வினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

PREV
14
விஜய் வருகையால் ஸ்தம்பித்த கோவை; தவெக-வினர் மீது போலீசார் வழக்குப்பதிவு

Police Filed Complaint Against TVK Party Members in Kovai : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், 2 நாள் பயணமாக கோவை சென்றுள்ளார். அங்கு நடைபெறும் பூத் கமிட்டி முகவர்களுக்கான பயிற்சி கருத்தரங்கில் பங்கேற்பதற்காக நேற்று விமானம் மூலம் கோயம்புத்தூர் வந்தார் விஜய். கோவை விமான நிலையத்தில் அவரை வரவேற்க ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டிருந்தனர். இதனால் விமான நிலையத்திற்கு வந்த பயணிகளுக்கு கடும் இடையூறு ஏற்பட்டது. மேலும் விமான நிலைய வளாகத்திலிருந்த பொருட்களும் தவெகவினரால் சேதப்படுத்தப்பட்டது. 

24
Vijay

தவெக-வினர் மீது வழக்குப்பதிவு

இதுதவிர விஜய் வாகனத்தை பின் தொடர்ந்து வந்த தவெகவினர், சாலையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை ஓட்டிச் சென்றுள்ளனர். இதனால் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் வெயிலில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. இது தொடர்பாகக் கோவை பீளமேடு காவல் நிலையத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியினர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்... தனி விமானத்தில் வந்த விஜய்யை இத்தனை பேர் டிராக் செய்தார்களா?

34
TVK Vijay

தவெக-வினர் மீது போலீஸ் நடவடிக்கை எடுத்தது ஏன்?

தவெக கோவை மாநகர மாவட்டச் செயலாளர் சம்பத் உள்ளிட்ட சிலர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக மொத்தம் 133 வாகனங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வருகையை முன்னிட்டு விமான நிலைய சாலையில் வைக்கப்பட்டிருந்த, திமுக கொடிகளை சேதப்படுத்தியதாகவும் தவெகவினர் மீது ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

44
Vijay Visit Kovai

விஜய் கட்சியின் மீது புகார் கொடுத்தது யார்?

இது தொடர்பாக கோவை காளப்பட்டி பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் பீளமேடு காவல்துறை நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அதன் அடிப்படையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கட்சி நிர்வாகிகளான திண்டுக்கல் செல்லமுத்து மற்றும் ஒட்டன்சத்திரம் மனோஜ் குமார் ஆகியோர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் பீளமேடு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு தவெகவின் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... கொங்கு மண்டலத்தில் விஜய்யை நோக்கி இளைஞர்கள் பட்டாளம்; உடைகிறதா திராவிட கட்சிகளின் வாக்குகள்?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories