கங்குவாவுக்கு பயந்து விலகிய பீனிக்ஸ் படத்தின் புது ரிலீஸ் தேதி அறிவிப்பு

Published : Apr 27, 2025, 11:37 AM IST

நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா ஹீரோவாக அறிமுகமாகும் பீனிக்ஸ் வீழான் திரைப்படத்தின் புதிய வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

PREV
14
கங்குவாவுக்கு பயந்து விலகிய பீனிக்ஸ் படத்தின் புது ரிலீஸ் தேதி அறிவிப்பு

Vijay Sethupathi Son Surya Sethupathi Debut Movie Phoenix : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவரைப்போல் இவரது மகன் சூர்யா சேதுபதியும், 'பீனிக்ஸ்' என்கிற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். ஏற்கனவே 'சிந்துபாத்' படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்த சூர்யா, இப்போது முழுநீள படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கங்குவாவுக்கு போட்டியாக ரிலீஸ் ஆக இருந்த இப்படம், கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் பீனிக்ஸ் படத்தின் புது ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

24
Surya Sethupathi

நாயகனாக அறிமுகமாகும் விஜய் சேதுபதி மகன்

இப்படத்தை அனல் அரசு இயக்கி உள்ளார். ஸ்டண்ட் மாஸ்டரான இவர், பீனிக்ஸ் படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார். 'ப்ரேவ் மேன் பிக்சர்ஸ்' நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் தலைப்புக்கு ஏற்றபடி, இது ஒரு அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகி இருக்கிறது. இப்படத்திற்காக பிரத்யேக சண்டை பயிற்சி எடுத்து நடித்துள்ளார் சூர்யா சேதுபதி. விஜய் சேதுபதி மகன் ஏற்கனவே 'சிந்துபாத்', 'நானும் ரவுடி தான்' போன்ற படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்திருந்தார்.

இதையும் படியுங்கள்... கங்குவா உடன் மோத பயமா? கடைசி நேரத்தில் எஸ்கேப் ஆன விஜய் சேதுபதி மகன் படம்- காரணம் என்ன?

34
Phoenix Release Date

பீனிக்ஸ் புது ரிலீஸ் தேதி

பீனிக்ஸ் திரைப்படம் கடந்த ஆண்டே எடுத்து முடிக்கப்பட்டது. இப்படத்தை கடந்த ஆண்டு நவம்பர் 14ந் தேதி ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவித்து இருந்தனர். ஆனால் சூர்யா நடித்த கங்குவா படமும் அதே நாளில் ரிலீஸ் ஆனதால், பீனிக்ஸ் படத்திற்கு போதிய திரையரங்குகள் கிடைக்கவில்லை. இதனால் பீனிக்ஸ் படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது அப்படத்தின் புது ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர். அதன்படி வருகிற ஜூலை மாதம் 4ந் தேதி பீனிக்ஸ் திரைப்படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

44
Vijay Sethupathi Son Surya

சர்ச்சையில் சிக்கிய சூர்யா சேதுபதி

விஜய் சேதுபதி தனது மகனின் முதல் படத்தில் எந்த விதத்திலும் தலையிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தனது சொந்த திறமையால் சினிமாவில் நிலைக்க முயற்சிப்பதாகவும், அதனால் அப்பா வேற, நான் வேற என சூர்யா சேதுபதி அளித்த பேட்டி பெரும் சர்ச்சையில் சிக்கியது. இதற்காக அவரை நெட்டிசன்கள் கடுமையாக ட்ரோல் செய்தனர். முதல் பட ரிலீசுக்கு முன்னரே சர்ச்சையில் சிக்கிய சூர்யா சேதுபதி 'பீனிக்ஸ்' படத்தின் மூலம் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடிப்பாரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

இதையும் படியுங்கள்... விஜய் சேதுபதியின் மகனா இது.. ரக்கட் லுக்கில் சூர்யா சேதுபதி.. லேட்டஸ்ட் போட்டோ க்ளிக்ஸ்..

Read more Photos on
click me!

Recommended Stories