பாக்ஸ் ஆபிஸில் குட் பேட் அக்லியை ஓட ஓட விரட்டும் கேங்கர்ஸ் - ஆத்தாடி இத்தனை கோடி வசூலா?

Published : Apr 27, 2025, 09:12 AM IST

அஜித் நடித்த குட் பேட் அக்லி படத்தைக் காட்டிலும் சுந்தர் சி - வடிவேலு கூட்டணியில் வெளியாகி உள்ள கேங்கர்ஸ் படத்தின் வசூல் அதிகரித்து உள்ளது.

PREV
14
பாக்ஸ் ஆபிஸில் குட் பேட் அக்லியை ஓட ஓட விரட்டும் கேங்கர்ஸ் - ஆத்தாடி இத்தனை கோடி வசூலா?

Gangers Day 3 Box Office Collection : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் சுந்தர் சி. முறை மாமன் படம் மூலம் அறிமுகமான இவர், 30 ஆண்டுகளைக் கடந்து வெற்றிகரமான இயக்குனராக ஜொலித்து வருகிறார். அண்மைக் காலங்களில் இவர் தொட்டதெல்லாம் ஹிட்டாகி வருகிறது. கடந்த ஓராண்டில் மட்டும் மூன்று ஹிட் படங்களை கொடுத்துவிட்டார் சுந்தர் சி. கடந்த ஆண்டு மே மாதம் ரிலீஸ் ஆன அரண்மனை 4 திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் ஹிட் அடித்தது.

24
Gangers Movie

சுந்தர் சி-க்கு கிடைத்த ஹாட்ரிக் வெற்றி

இதையடுத்து 2025-ம் ஆண்டு பொங்கல் ரேஸில் தன்னுடைய 12 வருட பழைய படமான மதகஜராஜாவை ரிலீஸ் செய்து, சிங்கிள் சிங்கமாக வெற்றிவாகை சூடினார். அப்படத்துக்கு போட்டியாக பொங்கலுக்கு வெளிவந்த புதுப்படங்கள் அனைத்தும் தோல்வியை தழுவின. இதையடுத்து கோடை விடுமுறைக்கு அவர் நடித்துள்ள கேங்கர்ஸ் திரைப்படம் திரைக்கு வந்துள்ளது. இப்படம் கடந்த ஏப்ரல் 24ந் தேதி ரிலீஸ் ஆகி திரையரங்குகளில் சக்கைப் போடு போட்டு வருகிறது. இப்படத்தின் மூலம் ஹாட்ரிக் வெற்றியை ருசித்துள்ளார் சுந்தர் சி.

இதையும் படியுங்கள்... சுந்தர் சி - வடிவேலு காம்போ காமெடியில் கலக்கியதா? சொதப்பியதா? கேங்கர்ஸ் விமர்சனம் இதோ

34
Gangers Box Office

கம்பேக் கொடுத்த வடிவேலு

கேங்கர்ஸ் திரைப்படத்தை இயக்கியதோடு மட்டுமின்றி அதில் ஹீரோவாகவும் நடித்துள்ளார் சுந்தர் சி. இப்படத்தில் ஹீரோயின்களாக வாணி போஜன், கேத்தரின் தெரசா ஆகியோர் நடித்திருந்தனர். மேலும் நகைச்சுவை நடிகர்களான வடிவேலு, முனீஸ்காந்த் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்தை சுந்தர் சி-யின் மனைவி குஷ்பு தயாரித்திருந்தார். இப்படத்திற்கு சத்யா இசையமைத்திருந்தார். கேங்கர்ஸ் படம் மூலம் காமெடி நடிகராக கம்பேக் கொடுத்துள்ளார் வடிவேலு.

44
Gangers Beat Good bad Ugly in Box Office

வசூல் வேட்டையாடும் கேங்கர்ஸ்

கேங்கர்ஸ் திரைப்படம் ரிலீஸ் ஆன முதல் நாளில் இருந்தே பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டையாடி வருகிறது. தமிழ்நாட்டில் மட்டும் முதல் நாள் ரூ.1.16 கோடியும், இரண்டாம் நாள் ரூ.1.16 கோடியும் வசூலித்த இப்படம் மூன்றாம் நாளில் அதிகபட்சமாக ரூ.1.68 கோடி வசூலித்துள்ளது. இதன்மூலம் இதுவரை தமிழ்நாட்டில் மட்டும் கேங்கர்ஸ் திரைப்படம் மூன்று நாட்களில் 4 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இப்படம் அஜித்தின் குட் பேட் அக்லியை விட அதிகம் வசூலித்து உள்ளது. குட் பேட் அக்லி திரைப்படம் நேற்று வெறும் ரூ.1.2 கோடி மட்டுமே வசூலித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... அதற்குள் ஓடிடியில் ரிலீஸ் ஆகப்போகிறதா அஜித்தின் குட் பேட் அக்லி?

Read more Photos on
click me!

Recommended Stories