script type="application/ld+json"> { "@context": "https://schema.org", "@type": "WebSite", "name": "Asianet News Tamil", "url": "https://tamil.asianetnews.com", "potentialAction": { "@type": "SearchAction", "target": "https://tamil.asianetnews.com/search?topic={search_term_string}", "query-input": "required name=search_term_string" } }

Watch : புதுவையில் தனியார் கிடங்கில் தீவிபத்து! பல மணிநேரம் போராடி தீயணைப்பு!

Aug 19, 2023, 4:23 PM IST

புதுச்சேரி கிராம பகுதியான கரசூரில் எல் & டி தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலை கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு மூடப்பட்டதால் அந்த இடத்தை நிர்வாகம் பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் வைக்கும் கிடங்காக மாற்றி உள்ளது.

இந்நிலையில் இக்கிடங்கில் ஜன்னல் வழியாக புகை கிளம்புவதை கண்ட காவலாளி இதுகுறித்து சேதராப்பட்டு தீயணைப்பு நிலையத்துக்கு புகார் அளித்தார். அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முற்பட்டனர்.

ஆனால் தீ கட்டுக்குள் வராமல் தொடர்ந்து புகைந்து எரிய தொடங்கியதால், அருகே உள்ள தன்வந்திரி நகர், வில்லியனூர், மற்றும் தமிழக பகுதியான வானூர் உள்ளிட்ட தீயணைப்பு நிலைய வாகனங்களும் வரவழைக்கப்பட்டு சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக போராடி தீ அணைக்கபட்டது.

மேலும், இந்த தீ விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் முதல் கட்ட விசாரணையில் மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். இதில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி நாசமானது.