script type="application/ld+json"> { "@context": "https://schema.org", "@type": "WebSite", "name": "Asianet News Tamil", "url": "https://tamil.asianetnews.com", "potentialAction": { "@type": "SearchAction", "target": "https://tamil.asianetnews.com/search?topic={search_term_string}", "query-input": "required name=search_term_string" } }

புதுவையில் முதல்வரின் பிறந்தநாள் அலங்கார வளைவு விழுந்து விபத்து; 3 பேர் படுகாயம்

Aug 8, 2023, 8:07 AM IST

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பிறந்த நாள் 4ம் தேதி கொண்டாடப்பட்டது. முதலமைச்சர் ரங்கசாமி பிறந்தநாளை என் ஆர் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள், என் ஆர் காங்கிரஸ் நிர்வாகிகள் விமரிசையாகக் கொண்டாடினர். இதற்காக மாநிலம் முழுவதும் பல்வேறு விதவிதமான கட்டவுட்கள் மற்றும் அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டு இருந்தது.

இதன் ஒரு பகுதியாக அவர் இல்லம் உள்ள சாலையான வழுதாவூர் சாலையின் இரு புறங்களிலும் பேனர்,  அலங்கார வளைவுகள் வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் கதிர்காமம் அரசு மருத்துவனை முன்பு வைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவு சரிந்து சாலையில் விழுந்தது.

அப்போது அவ்வழியே சென்று கொண்டிருந்த மூன்றுக்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் படுகாயம் அடைந்தனர். மேலும் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது.  உடனடியாக அங்கிருந்தவர்கள் பேனரை அகற்றிய பிறகு  போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. இதனால் வழுதாவர் சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.