Apr 16, 2024, 1:29 PM IST
தற்போது கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனால் பல்வேறு உடல் நல பிரச்சனைகள் ஏற்படும். அவற்றில் ஒன்று தான் 'ஹீட் ஸ்ட்ரோக்'. அளவுக்கு அதிகமான வெப்பத்தை உடலால் தாங்கி கொள்ள முடியாமல் போகும் போது தான் இந்த பிரச்சினை ஏற்படுகிறது. மேலும் இந்த பருவத்தில் உடலில் இருந்து வியர்வை வெளியேறுவதால், உடலில் நீர் இல்லாமல் உடல் வெப்பம் அதிகரித்து ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படும். இதனால் சிலர் மயக்கம் போட்டு கூட கீழே விழுவார்கள். சில நேரம் ஹீட் ஸ்ட்ரோக்கால் உயிரிழப்பு கூட ஏற்படுமாம்.