பெண்களுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய்! தடுப்பது எப்படி? விளக்கும் பிரபல மருத்துவர் ராஜா!

Jan 16, 2025, 5:50 PM IST

மனிதனின் வாழ்வியல் மாற்றம், உணவு பழக்கம், போதை பழக்கம், மரபணு மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணத்தால் இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவில் புற்றுநோய் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நுரையீரல் புற்றுநோய், வாய் தொடர்பான புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய் மற்றும் வயிறு தொடர்பாக புற்றுநோய் ஆகிய 5 புற்றுநோய் இந்தியாவில் அதிகமாக பரவி வருகிறது. இந்த மார்பக புற்றுநோய் தவிர மற்ற புற்றுநோய்கள் அனைத்தும் ஆண் மற்றும் பெண் என இருவருக்கும் வரும். குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாகவே பெண்களுக்கு கர்ப்பப்பை வாய் புற்று நோய் பாதிப்பு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில்  கர்ப்பப்பை வாய் புற்று நோய் ஏற்பட என்ன காரணம். இதனை தடுப்பது எப்படி உள்ளிட்ட விவரங்களை பிரபல மருத்துவர் ராஜா ஏசியா நெட் யூடியூப் சேனலுக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அதில் தமிழகத்தில் பொறுத்தவரையில் அதிகமாக பாதிக்கப்படுவது மார்பக புற்றுநோய் தான். அனைத்து புற்று நோய்களை சேர்த்து பார்க்கும் போது 30 சதவீத பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இரண்டு என்ன வென்று பார்த்தால் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தான். 20 சதவீத பெண்கள் பாதிக்கப்படுவதாக கூறியுள்ளார். இந்த இரண்டு புற்று நோயை சேர்த்தாலே 50 சதவீதம் வந்து விடுகிறது. 

கர்ப்பப்பை வாய் புற்றுநோயை பொறுத்தவரையில் மன நோயினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அதிகம் பாதிக்கப்படுவதாக மருத்துவர் தெரிவித்துள்ளார். மற்ற புற்று நோயை பார்க்கும் போது இது தடுக்கக்கூடிய புற்று நோயாகும். 90 சதவீதத்திற்கும் அதிகமான புற்று நோய் பரம்பரை புற்று நோய் கிடையாது. வாழ்க்கை முறை உள்ளிட்ட காரணங்களாக இருக்கும். 

மார்க புற்றுநோய்

மார்பக புற்றுநோய் எடுத்துக்கொண்டால் மொத்தம் 4 கட்டங்கள் உள்ளது. முதல் மற்றும் இரண்டாது கட்டம் முறையான சிகிச்சை அளித்தால் 100 சதவீதம் குணப்படுத்தலாம். மூன்று மற்றும் நான்காவது கட்டம் நோயை கட்டுப்படுத்தலாம். இதனால் ஏற்படும் பிரச்சனைகளை குறைக்கலாம். ஆனால் பூரணமாக குணப்படுத்துவது கஷ்டம்.