Crime : பெண்களின் அந்தரங்க புகைப்படங்களை மார்பிங் செய்து மிரட்டிய நபரை கோவை போலீசார் கைது செய்தனர்!

Crime : பெண்களின் அந்தரங்க புகைப்படங்களை மார்பிங் செய்து மிரட்டிய நபரை கோவை போலீசார் கைது செய்தனர்!

Published : Oct 12, 2022, 10:47 AM IST

சமூக வலைத்தள செயலிகளில் அழகான ஆண்கள் படத்தை வைத்து பெண்களின் அந்தரங்க புகைப்படங்களை வாங்கி மிரட்டிய அழகுராஜாவை பிடித்தது கோவை போலீசார் கைது செய்தனர்.
 

கோவை மாநகர சைபர் கிரைம் காவல் நிலைய குற்ற எண் 37/2022 ன் படி வழக்கு பதிவு செய்து அந்த வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது. அழகிய ஆண்கள் படங்களை ப்ரொபைல் போட்டோவாக வைத்து பல பெண்களை நம்ப வைத்து அவர்களுடைய அந்தரங்க போட்டோ மற்றும் வீடியோக்களை பெற்று மிரட்டு பணம் பறித்த நபரை கோவை சைபர் கிரைம் போலீசார் பிடித்துள்ளனர்.

யோ-யோ என்ற ஆப் மூலமாக தன்னிடம் பழகி, அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பெற்று பணம் பறித்ததாக கோவை மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பெண் ஒருவர் புகார் அளித்தார். புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இரண்டு மாத இடைவேளைக்கு பின்னர் ஒய்யார நடைபோட்டு ஊருக்குள் வந்த கஜா யானை

இந்த நிலையில் விருதுநகரை அடுத்த கூமப்பட்டியை சேர்ந்த பரமசிவம் என்பவர் போலியாக ப்ரொபைலை உருவாக்கி பெண்களிடம் கைவரிசை காட்டியது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவரை காவல் நிலையம் அழைத்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பரமசிவம் யோ யோ என்ற (YoYo) ஆன்லைன் இணையதள ஆப் மூலம் பல பெண்களிடம் நண்பராக பழகி அழகிய ஆண்களுடைய புகைப்படத்தை தன்னுடைய புகைப்படமாக (ப்ரொபைல் போட்டோவாக ) வைத்து பல பெண்களை நம்ப வைத்து அவர்களுடைய அந்தரங்க போட்டோ மற்றும் வீடியோக்களை பெற்றதும்.

கஞ்சாவுக்கு அடுத்து அதிகளவு விற்பனையாகும் போதை ஆயில்.. கோவையில் அதிரடி காட்டிய ரயில்வே துறை !


இதனை நம்பி தனது அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை கொடுத்த பெண்களிடம், அவற்றை ஆன்லைனில் பரப்பி விடுவேன் என்று கூறி மிரட்டி அவர்களிடமிருந்து பணத்தை பெற்று ஜாலியாக இருந்ததும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பணத்தை கொடுங்க.. டபுளாக தாரேன்..தூத்துக்குடியில் கோடிக்கணக்கில் சுருட்டிய போலி முள்படுக்கை சாமியார்!
02:45 ஹைதராபாத்தில் வேறொரு பெண்ணுடன் உல்லாசம்; பிஆர்எஸ் தலைவரை மடக்கி பிடித்த மனைவி
26:52Watch | ஆம்ஸ்ட்ராங் வழக்கில் குற்றவாளிகளை நெருங்கிவிட்ட காவல்துறை? / Rajaram Rtd ACP Interview
00:34Arrest : பட்டாகத்தியோடு பர்த்டே கொண்டாட்டம்.! நெருப்பு பறக்க காரில் ரேஸ்- ரவுடிக்கு மாவு கட்டு போட்ட போலீஸ்
01:00போர்க்களமான நீதிமன்ற வளாகம்; ரௌடிகளை விட மோசமாக தாக்கிக்கொண்ட வழக்கறிஞர்கள்
01:00Illicit Liquor: பால் பாக்கெட்டை போல் வீடு வீடாக டோர் டெலிவரி செய்யப்படும் சாராய பாக்கெட்
Seetharaman (Retired police) Interview | தென்தமிழகத்தில் சாதிய கொலைகள் தொடர்கதை ஆவது ஏன்?
Explainer | ஜெயக்குமார் மரணத்தில் காவல்துறைக்கு இருக்கும் சவால்கள் | Rajaram (Rtd ACP) Interview
02:17DMK : திண்டுக்கல்.. வெட்டி கொலை செய்யப்பட்ட தி.மு.க பிரமுகர்.. முன் விரோதமா? போலீசார் தீவிர விசாரணை!
14:58Coimbatore : கோவை.. இளைஞர்களை குறி வைத்து கஞ்சா & உயர் ரக போதை பொருட்கள் விற்பனை - அதிரடியாக ஐவர் கைது! Video!