Inimel Song: ரொமான்ஸில் கமலை மிஞ்சிய லோகி! தீரா காதலும்... திருமணத்திற்கு பின் வரும் மோதலும்! 'இனிமேல்' பாடல்!

Mar 25, 2024, 4:21 PM IST

'இனிமேல்' பாடல் நவீன நகர்ப்புற ரிலேஷன்ஷிப்பில்,  காதலின் அனைத்து நிலைகளையும் அதன் ஏற்ற இறக்கங்களுடன் சித்தரிக்கும் பாடலாகும். ஸ்ருதி ஹாசன்  பாடி,  இசையமைத்துள்ள இனிமேல்  பாடலை, கமல்ஹாசன் எழுதியுள்ளார்.  ஸ்ருதி ஹாசனுக்கு ஜோடியாக... பல ஆக்ஷன் படங்களை இயக்கி பிரபலமான லோகேஷ் கனகராஜ் நடித்துளளார்.

இப்பாடலின் டீசர் சமீபத்தில் வெளியான போதே... ஸ்ருதி ஹாசனுடன் ஓவர் ரொமான்ஸில் பட்டையை கிளப்பிய லோகி, பாடலிலும் தன்னுடைய நடிப்பை சிறப்பாக வழங்கியுள்ளார். ரசிகர்கள் பலர் ரொமான்ஸில் கமல்ஹாசனையே லோகி மிஞ்சிவிட்டதாக கூறி வருகிறார்கள். இந்த பாடல் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.