Tirumala Tirupati Devasthanam
உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் பல்வேறு மாநிலங்கள் மற்றும் உலக நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகிறனர். குறிப்பாக தமிழகத்தில் இருந்து அதிகளவில் பக்தர்கள் திருப்பதி செல்கின்றனர். இந்நிலையில் பக்தர்கள் விரைவாக ஏழுமலையானை தரிசனம் செய்ய தேவஸ்தானம் தரப்பில் விஐபி தரிசனம், சிறப்பு தரிசனம் உள்ளிட்டவைகள் ஆன்லைனில் மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே வெளியிடப்படுகிறது.
VIP Darshan Tickets
நேரடியாக திருமலைக்கு வரும் பக்கர்களுக்கு திருமலையில் நேரடியாக கூடுதல் செயல் அதிகாரி அலுவலகத்தில் வழங்கப்பட்டு வந்தது. இங்கு போதிய வசதி இல்லாமல் இருந்தது. இந்நிலையில் கோகுலம் கெஸ்ட் ஹவுஸ் பின்புறத்தில் ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகளுக்கான புதிய கவுன்டரை கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்திரி சிறப்பு பூஜைகள் செய்து நேற்று திறந்து வைத்தார். பக்தர்களிடம் விவரம் பெற்றுக் கொண்டு முதல் டிக்கெட் வழங்கினார்.
Tirumalai Temple
இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வெங்கையா சவுத்திரி: கடந்த காலங்களில் ஸ்ரீவாணி கவுண்டர் வரிசைகளில் மழை பெய்தால் பக்தர்களுக்கு ஏற்படும் சிரமத்தை கருத்தில் கொண்டு சிறப்பு கவுண்டர் அமைக்கப்பட்டுள்ளது. இனி ஸ்ரீவாணி டிக்கெட்டை பக்தர்கள் எந்த ஒரு சிரமமின்றி ஈசியாக பெறலாம். ஒரு நாளைக்கு 900 டிக்கெட்டுகள் நேரடியாக வழங்கப்படும் (ஆப்லைனில்) வழங்கப்படும். ஒரே நிமிடத்தில் பக்தர்களுக்கு டிக்கெட் வழங்கப்படும் என்றார்.